நெருப்புப்போல, கண் சிவந்து- (கோபத்தாற்) கண்கள் சிவக்கப் பெற்ற, தலை போரில் - போர்க்களத்தின் முன்னிடத்தில், சேர்ந்து - சென்றுசேர்ந்து, அங்கு - அவ்வடத்தில், எழிலி கணம்போல்- மேகக்கூட்டம்போல, ஏந்தும் சிலையால் கணை மழை பெய்து- (கையில்) எடுத்த வில்லினால் அம்புமழையைச்சொரிந்து, எதிர் ஊன்றி-( அருச்சுனன்) எதிரில் நிலைத்துநின்று, இறந்தார்- (அவன் எய்த அம்புகளால்) அழிந்தார்கள்; ( எ -று.) 'கணமழை' என்ற உருவகம், 'எழிலிக்கணம்போல்' என்ற உவமைக்கு அங்கமாகவந்தது, சகுனிக்கு இப்பெயர்களுடன் புத்திரர் இருவர் இருந்ததாக வியாசபாரதத்தால் தெரியவில்லை பி-ம்: கனல்போலவியக்கணப் போதில். சரமழை.எதிரூன்ற. விடசேனன். எனும்பேர். (114) 70.-கவிக்கூற்று: அருச்சுனன் வீரர் பலரையுங் கொன்றதைக் குறித்த பாராட்டு. சஞ்தத்தகர்விண்குடியேறத்தானேயடர்த்தான்பகதத்தன் விஞ்சைக்கடவுள்சிகரநிகர்வேழத்துடனேவிழப்பொருதான் வஞ்சச்சகுனிமைந்தரையுமலைந்தான்விசயன்வடிக்கணையா லெஞ்சப்பொருதநரபாலர்க்கிலக்கேதன்றங்கெண்ணுதற்கே. |
(இ-ள்.) அன்று - அன்றைத்தினத்தில்,- விசயன்- அருச்சுனன், தான்ஏ - தானொருவனாகவே [பிறர்துணையில்லாமலே], சஞ்சத்தகர் விண்குடி ஏற - (அநேக) ஸம்சப்தகர்கள் வீரசுவர்க்கத்தில் சென்று தங்கும்படி, வடிகணையால் - கூர்மையான அம்புகளால், அடர்ந்தான் - அழித்தான்;( அன்றியும்), பகதத்தன்-, விஞ்சை கடவுள் சிகரம் நிகர் - வித்தியாதரராசனான குபேரனது மலையாகிய கைலாசத்தை யொத்த, வேழத்துடனே - வெள்ளை யானையுடனே, விழ- இறந்துவிழும்படி, பொருதான் - போர்செய்தான்; (மற்றும்), வஞ்சம் சகுனி மைந்தரைஉம்'- வஞ்சனையையுடைய சகுனியின் குமாரர்களையும், மலைந்தான்- அழித்திட்டான்; (ஆதலால்), எஞ்ச பொருத நரபாலர்க்கு - பகையழியும்படி போர்செய்தே (தருமன் முதலிய) அரசர்களுக்கு, அங்கு- எதிர்ப்பக்கத்தில், எண்ணுதற்கு- (ஒருபொருளாக) மதிக்கப்படுதற்கு, இலக்கு- ஏற்றகுறி, ஏது-யாது உள்ளது? (எ - று.) அருச்சுனொருவனே இத்தனைபெயரை அன்றைக்கு அழித்திட்டனனென்றால், மற்றைத் தருமன் முதலியோர்க்கெல்லாம் எதிர்த்து அழித்திடுதற்கு ஏற்ற இலக்காவார்எவருமில்லை யென்பதாம். சுவர்க்கம் மேலிடத்திலுள்ளதாதல்பற்றி, 'குடியேற'எனப்பட்டது. சீவகசிந்தாமணியில் " விஞ்சைக்கிறைவன்" என்ற விடத்து, 'விஞ்சை-குணப்பண்பு பண்புடைப்பொருள்மேல் நின்ற ஆகுபெயர்' என உரைத்தார்நச்சினார்க்கினியர். வித்யாதரர் - பதினெட்டுத் தேவகணங்களுள் ஒருசாதியார்;இவர்களுக்கும் யக்ஷர்கந்தருவர் முதலிய மற்றஞ்சிலைவகையார்க்கும் குபேரன்அரசனாதலை, கீழ்ப்புட்பயாத்திரைச் சருக்கம், மணிமான்வதைச் சருக்கம் |