பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்85

     (இ-ள்.) அறம் தந்த மைந்தற்குஉம்- தருமராசன் பெற்ற புத்திரனான
யுதிட்டிரனுக்கும், வீமற்குஉம்-, விசயற்குஉம்- அருச்சுனனுக்கும், அபிமற்குஉம்ஏ -
அபிமனுக்கும், (ஆக இந்நாலுபேருக்குமே), புறம் தந்த- முதுகு கொடுத்த, வய
வீரர்எல்லார்உம் - வலிமையையுடைய (துரியோதனன் பக்கத்து) வீரர் யதாவரும்,
(சூரியன் அஸ்தமித்தபின்),- அரசன் புறம் சார்பு இருந்து - துரியோதனனது
பின்பக்கத்திலே யிருந்துகொண்டு, இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு -
(அன்றைத்தினம்) மரித்து அந்தக் கூட்டத்தில் வந்திடாத அரசர்களுக்காக, இரங்கா
அழா - மனமிரங்கிப் புலம்பி, மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி
கூறினார் - கொடுமை விளைக்கிற யானையோடு இறந்த பகதத்தனது பலத்தைப்
பாராட்டி எடுத்துக் கூறினார்கள்; (எ - று.)

     முன் இருக்க முகமில்லாமையால், புறஞ்சார் பிருந்தாரென்க: இனி, புறஞ்சார்பு
- சுற்றிடமுமாம். ' அந்த யூகம்' என்றது - அப்பொழுது தாம் கூடிய கூட்டத்தை;
இனி, யூகத்து இறந்தது என இயைப்பின், படைவகுப்பில் மரித்து என்க. இரங்குதல்-
விசனப்படுதல். வழா மறம் என எடுத்து, தவறாத வலிமை யெனினுமாம். அறம்-
அறக்கடவுள்; அஃறிணையாற் கூறியது.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினொரு கவிகள் - பெரும்பாலும்
ஐந்தாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றை நான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய
நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                  (128)

84.- சொன்னசொல்லை நிறைவேற்றாமைக்காகக்
கர்ணன் துரோணனைப் பரிகசித்தல்.

மன்னர்க்குமன்னன்றன்முன்வைகுமுனிதன்னைமதியாமனீ
நென்னற்கலங்காமலுரைசெய்தவுரையின்றுநிலையானதே
கன்னப்பெயர்க்காளைமறையந்தணர்க்கென்னகட்டாண்மையுண்
டென்னச்சிரித்தான்வணங்காதவர்க்கென்றுமிடியேறனான்.

     (இ-ள்.) (அச்சமயத்தில்), மன்னர்க்கு மனனன்தன் முன் வைகும் -
ராஜராஜனான துரியோதனனுக்கு எதிரில் வீற்றிரந்த, முனி தன்னை- துரோணனை
(ப்பார்த்து), (அவனை ஒரு பொருளாக மதியாமல்),- வணங்காதவர்க்கு என்றுஉம்
இடி ஏறு அனான்- (தன்னை) வணங்காதவர்களுக்கு [பகைவர்களுக்கு]
எப்பொழுதும் பேரிடிபோல் அழிவுசெய்பவனான, கன்னன் பெயர் காளை -
கர்ணனென்னும் பெயருள்ள வீரன், 'நீ-, மதியாமல் - ஆலோசனையில்லாமல்,
நென்னல்- நேற்று, கலங்காமல்- கலக்கமில்லாமல்[உறுதியாக], உரை செய்த -
(தருமனைப் பிடித்துக்கொடுப்பேனென்று) கூறின, உரை - சபதவார்த்தை, இன்று -
இன்றைக்கு, நிலை ஆனது ஏ - உன்மையாய் நடந்தேறிற்றே! மறை அந்தணர்க்கு -
வேதமோதுவதே தொழிலாகவுள்ள பிராமணர்க்கு, என்ன கட்டு ஆண்மை உண்டு -
என்ன உறுதியான வீரமுள்ளது. என்ன - என்று (நிந்தையாகக்) கூறி, சிரித்தான்-
(பரிகாசமாக) நகைத்தான்; (எ-று.)