பக்கம் எண் :

86பாரதம்துரோண பருவம்

     கர்ணன் எப்பொழுதும் தன்னைத் தான் மேலாகநினைக்கும் பெருஞ்
செருக்குடையவ னாதலால், இங்ஙனஞ் செய்தான். மதியாமல் என்ன என்று
இயைத்துஉரைத்தலும் ஒன்று. நிலையானது என்றது, பிறகுறிப்பு வகையால்,
நிலைப்படாதுபோனதைக் குறிக்கும்; ஏ - இகழ்ச்சி. 'வணங்காதவர்க்கு என்றும்
இடியேறனான்' என்பதை, அடுத்தபாட்டில் வரும் 'குரு' என்பதற்கு
அடைமொழியாக்கி, குளகமாக்கொள்ளினும் அமையும்.             (129)

85.- இதுமுதல் ஏழு கவிகள் - துரோணன் கூறும்
எதிர்மொழியைத் தெரிவிக்கும்.

தெருமந்தசிந்தைச்சிலைக்கைக்குருக்கண்சிவப்பேறவே
யுருமுந்திகைக்கக்கொதித்தங்கர்பதியோடுறக்கூறுவான்
கருமந்தவாவிற்றிறற்கன்னனேயல்லகழன்மன்னரிற்
றருமன்றன்முன்னிற்கவல்லார்கள்யாரித்தளந்தன்னிலே.

இதுவும். அடுத்த கவியும் - ஒருதொடர்.

     (இ -ள்.) (அதுகேட்டு), தெருமந்த- கலங்கின, சிந்தை- மனத்தையுடைய,
சிலைகை குரு- விற்பிடிக்குங் கையையுடைய துரோணன், கண் சிவப்பு ஏற -
கண்கள்செந்நிறம் மிகவும், உரும்உம் திகைக்க - இடியும் அஞ்சித் திடுக்கிடவும்,
அங்கர்பதியோடு- அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணனுடன், கொதித்து -
கோபித்து, உற கூறுவான்- பொருந்த உத்தரஞ் சொல்லுவான்:- கருமம் தவா -
செய்யுந்தொழில் தவறாத, வில் திறல் - வில்வன்மையையுடைய, கன்னன்ஏ அல்ல-
கன்னன்மாத்திரமே யல்லன்: இ தளந்தன்னில் - இந்தப்பக்கத்துச் சேனையிலுள்ள,
கழல் மன்னரில் - வீரக்கழலையுடைய அரசர்களில், தருமன்தன் முன் நிற்க
வல்லார்கள் யார் - யுதிட்டிரனது முன்னிலையில் (எதிர்த்து) நிற்கவாயினும்
வல்லமையுடையார் எவர்?(எ - று.)

     'கருமந்தவாவிற்றிறல்' என்ற அடைமொழிகளைக் கர்ணனுக்குத் துரோணன்
கொடுத்தது, அவன் அங்ஙனம் தன்னைத் தானே கருதி நன்குமதித்துச்
செருக்கிநிற்கிறானென்பதை வெளியிடுதற்கு; இகழ்ச்சியுமாம். உருமும், உம் -
உயர்வுசிறப்பு. கன்னனே, ஏ- பிரிநிலையோடு உயர்வுசிறப்பு. பி-ம்: வன்றிறல்.(130)

86.இன்றல்லநாளைக்குமாநின்னவைக்கண்ணிருந்தோர்களிற்
சென்றல்லலுறமோதியறனமைந்தனைத்தங்கள்சிலையாண்மையால்
வென்றல்லதணுகாதவீரர்க்குவிடைநல்குவிறன்மன்னநீ
நன்றல்லவீரத்திலோரஞ்சொலுவதென்றுநனிசீறினான்.

     (இ-ள்.) இன்று அல்ல- இன்றைக்கே அன்று; நாளைக்கு உம் ஆம் -
நாளைக்காயினும் (தருமனைப்பிடிக்க முயலல்) ஆம்; விறல் மன்ன-
வெற்றியையுடைய அரசனே!  நின் அவைக்கண் இருந்தோர்களில்- உனது
சபையிலுள்ளவர்களுள், சென்று- (எதிர்த்துப்) போய், அறன் மைந்தனை - தரும
புத்திரனை, அல்லல் உற மோதி- துன்பமுண்டாம்படி தாக்கி, தங்கள் சிலை
ஆண்மையால் - தங்கள் வில்லின் திறத்தால், வென்று அல்லது அணுகாத-
சயித்தல்லது திரும்பிவராத, வீரர்க்கு-, நீ-, விடை நல்கு அனுமதி கொடுப்