பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்87

பாய்; வீரத்தில் - பராக்கிரமவிஷயத்தில், ஓரம் சொலுவது - (ஒருவரை ஒருவர்)
பக்ஷபாதமாக (நிந்தித்துப்) பேசுவது, நன்று அல்ல- நல்லதன்று, என்று-
என்றுசொல்லி, நனி சீறினான்.- மிகக்கோபித்தான்; (எ -று.)

     மன்ன- துரியோதனனை நோக்கிய விளி. இன்றல்ல நாளைக்குமாம்-
நேற்றுச்சொன்னபடி இன்றைக்கு நான் தருமனைப்பிடிக்க முடியாமற்
போய்விட்டாலும்,கர்ணன்போன்றவர் எவரேனும் இன்ற சபதஞ்செய்து அங்ஙனமே
நாளைக்குநிறைவேற்றப்பார்க்கலாமென்றவாறு. நாளைக்கு மா எனப்பிரித்து,
நாளைக்குஎன்பதை 'சென்று' என்பதனோடும், 'மா'என்பதை 'அவை'
என்பதோடும்இயைத்தலுமாம். சிலைக்கைக்குரு (85) சீறினான் (86) என இயையும்.
'அல்ல' -ஒன்றன்பாலுக்கு வந்தது. பி-ம்: அறன்மன்னனை.           (131)

87.வில்லாண்மை யாவர்க்கு மின்றென்றெனைப்போல
                            மிகுவஞ்சினஞ்,
சொல்லாம லறன் மைந்தனைப் போர்மலைந்துங்
                       கடோ வாணமையால்,
வல்லாரினிக்கொண்டு வம்மின்கள் வந்தாலிம்மண்
                            ணொன்றுமோ,
அல்லாதவுலகிற்குமிருநாலுதிக்கிற்குமவர்வீரரே.

இதுமுதல் ஐந்து கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) 'யாவர்க்குஉம்- (என்னையொழிய வேறு) எவருக்கும், வில்
ஆண்மைஇன்று - வில்லின் திறமை இல்லை,' என்று-, எனை போல - யான்
சபதஞ்செய்ததைப்போல மிகு வஞ்சினம் சொல்லாமல் - மிக்க சபதவார்த்தைகளைக்
கூறாமலே,- வல்லார்- வல்லவர்கள் உங்கள் தோள் ஆண்மையால் - உங்களது
புசபராக்கிரமத்தால், போர் மலைந்து - போர்செய்து, அறன் மைந்தனை-
தருமபுத்திரனை, இனி-, கொண்டு வம்மின்கள் - பிடித்துக்கொண்டு வாருங்கள்;
வந்தால் (அவ்வாறு) வந்தால்,- அவர்- அப்படிக் கொண்டு வருபவரே,- இ மண்
ஒன்றும்ஓ - இந்தப்பூலோகமொன்றுக்கு மாத்திரமோ, அல்லாத உலகிற்குஉம்-
மற்றையுலகங்களுக்கும், இரு நாலு திக்கிற்குஉம்- எட்டுத்திக்குக்களுக்கும், வீரர்-
(சிறந்த) வீரராவர்; (எ-று.)

     நான் நேற்றுச்சபதஞ்செய்து இன்று தவறிப்போனே னென்று இகழ வேண்டா;
உங்களில் வல்லவர் எவரேனும் முந்திச் சபதஞ் செய்யாவிடினும், நாளைமுதல்
என்றைக்காவது தருமனைப் பிடித்து வருக;  வந்தால், அவனின் மிக்கவீரன்
எவ்வுலகத்தினு மில்லை யென்பதாம். தான் தருமனை நாளையகப் படுத்துத் தரலா
மென்று முந்தினநாட்சொல்லியதை, 'வில்லாண்மை வேறு யாவர்க்கும் இல்லை
யென்று எண்ணிச் சபதஞ்செய்ததாகக் கண்ணன் கருதினானென்று உட்கொண்டு'
வில்லாண்மையாவர்க்குமின்றென்று எனைப்போல மிகுவஞ்சினஞ் சொல்லாமல்
என்றுநீட்டூரமாகத் துரோணன் கூறுகிறான்; இனி, 'என்னைப்போலயாவர்க்கும்
வில்லாண்மையின்று' என்று பெருஞ்சபதம்பேசாமல் என இயைத்துக் கூறினுமாம்,
வல்லார் - வல்லவர்களே! என அண்மைவிளியுமாம், பி-ம்: என்றனைப்போல.
அவன் வீரனே.                                              (132)