88. | எம்போலவரிவில்லெடுத்தெய்யயார்வல்லரெனும்வீரரும் வெம்போரில்வந்தாலொரணுவுக்கு நில்லாதுவிளிகிற்பரால் வம்போதியென்பேறுவல்லாண்மைபுனையந்தவில்லாளிகூர் அம்போடிராமன்கையடலம்புமுவமிக்கிலதிபாவமே. |
(இ-ள்.) 'எம்போல எம்மைப்போல, வரி வில் எடுத்து - கட்டமைந்தவில்லை யேந்தி, எய்ய- (அம்பு) செலுத்த, யார் வல்லர்- யாவர் வல்லமையுடையார்? [எவருமில்லை யென்றபடி],' எனும்- என்று (பெருமிதம்) பேசுகிற, வீரர்உம்-, வெம் போரில் வந்தால்- கொடிய யுத்தத்தில் வந்தால், ஓர் அணுவுக்கும்உம் நில்லாது - ஒர்அணுப்போலவாயினும் முன்நிற்கமாட்டாமல், விளிகிற்பர்- அழிந்திடுவர், ஆல்- ஆதலால், வம்பு ஒதி என் பேறு - வீண்வார்த்தை பேசி யாதுபயன்? வல் ஆண்மை புனை - வலிய பராக்கிரமத்தை ஆபரணமாகக் கொண்ட, அந்த வில் ஆளி - வில்வீரனான அத்தருமனது, கூர் அம்போடு கூர்மையையுடைய அம்புகளுடனே, இராமன் கை அடல் அம்புஉம் -ஸ்ரீராமபிரான்கையிலுள்ள வலிய அம்புகளையும், உவமிக்கில் - ஒப்புமை கூறினால், அதி பாவம் - மிக்க தீவினையாம்; (எ-று.) போரில் வெற்றிதோல்விகள் ஒருதலையல்ல என்பது, முன்னிரண்டடியின் கருத்து.சிறிதும் மெய்யாகாது முழுப்பொய்யாகு மென்பார், அதனை வற்புறுத்துதற்கு 'அதிபாவம்' என உறுதி மொழியாற் கூறினார். இராமனென அடைமொழி கொடாமற் கூறினார், இராமர் மூவருள்ளுஞ் சிறப்புடைய தசரதராமனையே குறிக்கும். தைடன் என்னும் வடமொழிப்பெயர்க்கு - தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகல சற்குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. ஆல்- விகாரம். அம்பும், உம்- உயர்வுசிறப்பு. இராமனம்பின் மகிமை, அதிப்பிரசித்தம்; அதனினுஞ் சிறந்தது தருமனம்பு எனப் புகழ்ந்து கூறியவாறு. (133) 89. | கொத்தொத்ததொடையொத்தவளவொத்தசிறகொத்தகுதை யொத்தவொன், றொத்தொத்து முனையோடு முனைதத்தி விழுமாறுடன் றேவினான், றத்தொத்தபுரவித்தடந்தேர்ம னென்னோடு சாதித்ததும், வித்தொத்த தென்வாளியவன்விட்ட வடிவாளி விளைவொத்ததே. |
(இ-ள்.) கொத்து ஒத்த - திரட்சியில் ஒத்தவையும், தொடை ஒத்த - தொடுக்கும்வகையில் ஒத்தவையும், அளவு ஒத்த - அளவிலொத்தவையும், சிறகு ஒத்த - இறகில் ஒத்தவையும், குதை ஒத்த - அடியில் ஒத்தவையும் ஆகிய அம்புகளை, ஒன்று ஒத்து ஒத்து முனையோடு முனை தத்திவிழும் ஆறு- (யான் எய்த அம்புகள்) ஒவ்வொன்றோடும் பொருந்திப் பொருந்தி நுனியோடு நுனிபட்டு (அவை) விழும்படி, உடன்று ஏவினான்- கோபித்து (த் தருமன்) செலுத்தினான்: தத்து- தாவிச்செல்லுகிற, ஒத்த புரவி - (ஒன்றோடொன்று) ஒத்த ' குதிரைகளைப் பூட்டிய, தட தேர்- பெரிய தேரையுடைய, மன் - அத் தருமராசன், என்னோடு சாதித்ததுஉம் - மற் |