பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்89

றும் என்னோடு போர்செய்ததை ( க் கூறினால்), என் வாளி- யான் எய்தஅம்பு,
வித்து ஒத்தது- விதையைப்போன்றது; அவன் விட்ட-, வடி வாளி - கூரிய அம்பு,
விளைவு ஒத்தது- விளைச்சலைப் போன்றது; (எ - று.)

     யான் ஒரம்பு எய்தால் அதற்கு எதிராக அவன் பல அம்புகளை
எய்திட்டனனென்பதாம். ஒருவிதை பலவிதைகளுண்டாம்படி விளைதலின்,
வித்தையும்விளைவையும் உவமைகூறினார். தொடை என்பதற்கு - அம்பென்று
பொருள்கூறினால், ஒத்த அளவு என எடுத்து- சாஸ்திரவிதியோடு
ஒத்துள்ள[மாறுபடாத]அள வென்க. ஒத்த புரவி- நூல்முறைமைக்குத் தக்க குதிரை
யெனினுமாம்.சாதித்தல்- தொடங்கியதைச் சோர்வின்றி நிறைவேற்றலுமாம்.
ஒத்தல் - உவமித்தலும்,பொருந்தலும். பி - ம்: குதையொத்தவந்து.      (134)

90.வன்மைக்கு வயவீமன் வின்மைக்கு முகிலூர்தி
                          மகனன்றிவே,
றின்மைக்கு மாவிந்தை கிரிகன்னிகரியென்ப
                        ரெம்மன்னரும்,
வின்மைக்கும்வன்மைக்கு மிளையோரையனையாரை
                     மிக வெண்ணலாந்,
தன்மைக்குநிலையான தருமற்குநிகர்யார்
                     தனித்தெண்ணவே.

     (இ-ள்.) 'வன்மைக்கு - வலிமையில், வய வீமன் - வெற்றியையுடைய
வீமசேனனும், வின்மைக்கு - வில்லின்திறத்தில், முகில் ஊர்தி மகன்- மேகங்களை
வாகனமாகவுடைய இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனனும், அன்றி - அல்லாமல்,
வேறு இன்மைக்கு- வேறு (எவரும் சிறந்தவர்) இல்லாமைக்கு, கிரி கன்னி-
இமயமலையின்மகளான பார்வதியினமிசமான, மா விந்தை- சிறந்த துர்க்கை, கரி -
சாக்ஷி,' என்பர் எ மன்னர் உம்- என்று எல்லா அரசரும் கூறுவர்; வின்மைக்குஉம்-
வில்லின் திறத்திலும், வன்மைக்கு உம்- வலிமையிலும், இளையோரை அனையாரை -
தம்பிமார்களான வீமஅருச்சுனர்களைத் தனித்தனியொக்கும் வீரரை, மிக எண்ணல்
ஆம்- (உலகத்தில்) மிகுதியாகக் (குறித்துக்) கணக்கிடலாம்; தன்மைக்கு - (வின்மை
வன்மை என்ற அவ்விரண்டு) தன்மைகளிலும், நிலை ஆன - உறுதிபெற்ற, தருமற்கு
- யுதிட்டிரனுக்கு, தனித்து எண்ண- தனியேகுறித்துக் கணக்கிட, நிகர் யார் -
ஒப்பாகுபவர் யார்? [எவருமில்லை என்றபடி]; (எ - று)- இது, துரோணன் தான்
சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.

     வீம அருச்சுனர்க்கு ஒப்புமை கிடைத்தல் கூடும்; தருமனுக்குக் கிடைக்காது
என்க. முகில்ஊர்தி - அன்மொழித்தொகை; மேகங்களை இந்திரனுக்கு வாகன
மென்றல், மரபு. போருக்குஉரியதேவதை துர்க்கை யாதலால், அவள்
சாட்சியெனப்பட்டாள். விந்தியமலையில் வீற்றிருத்தல் பற்றி, துர்க்கைக்கு 'விந்தை'
என்ற பெயர்; விந்த்ய வாஸிநீ' என்பர் வடமொழியாரும்: உமாதேவி
தக்ஷகன்னிகையாயிருந்த உடம்பைத் துறந்து, தன்னை மகளாகப்பெரும் பொருட்டுப்
பலநாளாகத் தவம்புரிந்துவந்த பர்வதராசனுக்குப் பெண்ணாகத்