பக்கம் எண் :

92பாரதம்துரோண பருவம்

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்.

1.- கடவுள் வணக்கம்.

சங்கையி லாவகை யமபட ராலுயிர் தளர்பொழு தத்தருகே
மங்கையர் சூழவி ருந்தழு துள்ளம யக்கினும் யான்மறவேன்
கங்கையு நான்மறை யுந்துள வுங்கமழ் கழலிணை யுந்திருமா
லங்கையின் மீதொளிர் சங்கமு நேமியு மஞ்சன மேனியுமே.

     (இ-ள்.) சங்கை இலா வகை - சந்தேக மில்லாதபடி[நிச்சயமாக], யம
படரால் -யமனது வேலையாட்களால், உயிர்- (எனது) சீவன், தளர் பொழுதத்து-
வருத்தமடையுங்காலத்தில, அருகுஏ- (எனது) சமீபத்திலே, மங்கையர் -
இளம்பெண்கள் [உரியமகளிர்], சூழ இருந்து - சுற்றிலும் இருந்துகொண்டு, அழுது -
புலம்பி, உள்ளம் மயக்கின் உம்- (என்) மனத்தை மயக்கமடைவித்தாலும்,- யான்-, -
திருமால். திருமகள்கணவனான ஸ்ரீமகா விஷ்ணுவினது, கங்கைஉம் நால் மறைஉம்
துளவுஉம் கமழ் கழல் இணைஉம்- கங்கா நதியும் நான்குவேதங்களும் திருத்துழாயும்
பரிமளிக்கிற உபயதிரு வடிகளையும், அம் கையின்மீது ஒளிர் சங்கம்உம் நேமிஉம் -
அழகிய திருக்கைகளின்மேல் விளங்குகிற சங்க சக்கரங்களையும், அஞ்சனம்
மேனிஉம் - மைபோற்கரிய திருமேனியையும், மறவேன் - மறக்க மாட்டேன்;
(எ-று.) - எப்பொழுதும் இடைவிடாது சிந்திப்பே னென்பதாம்.

     இது- தியாநமென்னும் மனவணக்கம். மரணவேதனையொடு மாதர் பாசத்துக்கு
உட்படுங்காலத்திலும் எம்பெருமானை மறவேனென்று தமது மனவுறுதியை
விளக்கினார். உலகத்தில்பிறப்பெடுத்த உயிர் என்றைக்கேனும் ஒரு நாளில் இறத்தல்
நிச்சய மாதலால், 'சங்கையிலாவகை' என்றார். சங்கையிலாவகை தளர்பொழுதத்து
என்ற இயைப்பின்- அளவு இல்லாமல் துனபப்படும்பொழுது என்க. கங்கை
கமழ்தல்- கங்காநதி தோன்றுதல். திருமால் திரிவிக்கிரமனாய் உலகமளந்த காலத்தில்
மேலேசென்ற தொரு திருவடியைச் சத்திய லோகத்தில் பிரமன்
தன்கைக்கமண்டலதீர்த்தத்தாற்கழுவிவிளக்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமே கங்கையாய்ப்
பெருகிற் றென்பது, கதை. நான்மறைகமழ்தல் - வேதங்கள் இடைவிடாது
துதித்தலும்,சரண மடைதலும்.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள்- பெரும்பாலும் ஆறாஞ்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                         (139)

2.- துரோணன் தருமனோடு வன்புடன்பொர எண்ணுதல்.

நஞ்சவியாளமுயர்த்தபதாகைநராதிபனேவலினால்
விஞ்சவரூதினிமன்னர்திரண்டனர்விசயனைமேலிடுவா
னெஞ்சவராலழிவுண்டதபோதனனெருநலினுங்கடுகிப்(னனே.
பஞ்சவர்கோ முதல்வன் றனைவன் பொடு படைபொர
                                  வெண்ணி.