பக்கம் எண் :

98பாரதம்துரோண பருவம்

தென்திசையி லென முதனூலால் தெரிகிறது. மத்தக மா - மஸ்தகத்தையுடைய
மிருகம்; எனவே, யானையாம். நான்மை என்றது - எண்ணையே உணர்த்திற்று. (146)

9.- அருச்சுனன் அம்புமழைபொழிய, மாற்றார்சேனை யுடைதல்

மால்விடுதேர்மிசையான்வரிசாபம்வளைத்ததுமல்லிகல்வெங்
கோல்விடுபூசலும்வில்லுடனேபொழிகொண்டல்வியப்பெனலா
மேல்விடுதேர்களும்யானையும்வாசியும்வீரருமெய்யுருவக்
கால்விடுதாரையெழுஞ்சருகென்னவுடைந்தனர்கையறவே.

     (இ-ள்.) மால் - திருமால், விடு - செலுத்துகிற, தேர்மிசையான் - தேரின்மீது
உள்ளவனான அருச்சுனன், வரி சாபம் வளைத்ததுஉம்- கட்டமைந்த வில்லை
வணக்கினதையும், மல் இகல் - வலிமையோடு பராக்கிரமித்துச் செய்த, வெம் கோல்
விடு பூசல்உம்- கொடிய அம்புகளைப் பிரயோகிக்கிற போரையும், வில்லுடனே
பொழி கொண்டல் வியப்பு எனல் ஆம்- இந்திரவில்லோடு (கூடி) மழை பொழிகிற
காளமேகத்தின் அதிசயிக்கத்தக்க தன்மை யென்று சொல்லலாம்; மேல் விடு-
அவன்மேல் ( எதிர்த்துச்) செலுத்தப்படுகிற, தேர்களும்-, யானைஉம்- யானைகளும்,
வாசிஉம் - குதிரைகளும், வீரர்உம் - காலாள்வீரர்களும், மெய் உருவ -
(அவ்வம்புகளால்) உடல் துளைபட, கால் விடு தாரை எழும் சருகு என்ன-
காற்றுவீசுகிற வேகத்தால் மேலெழுகிற உலர்ந்த இலைகள்போல, கை அற -
செய்ததொழி லொன்று மில்லாமல், உடைந்தனர் - தோற்று அழிந்தனர்; ( எ-று.)

     முதல்வாக்கியத்தில், காளமேகம் - அருச்சுனனுக்கும், இந்திரவில் - அவனது
காண்டீவவில்லுக்கும், நீர்மழை - அம்புமழைக்கும், இரண்டாம் வாக்கியத்தில்,
காற்றின்வேகம்- அம்பின் வேகத்துக்கும், சருகு- சேனைக்கும் உவமையாம்.
தேர்களும் யானையும் வாசியும் வீரரும் உடைந்தனர் - அஃறிணையும்
உயர்திணையும் எண்ணி, சிறப்பினால் உயர்திணைமுடி பேற்றன. இகல்பூசல் -
வினைத்தொகை. இனி, மல்லிகல்- ஒருபொருட்பன்மொழி யென்றலும் ஒன்று:
மிக்கவலிமை யென்க. 'மல்லிகைவெங்கோல்' என்ற பாடத்துக்கு - (மன்மதனது
மலரம்பு ஐந்தனுள் மோகத்தையுண்டாக்குகிற.) நவமல்லிகையம்புபோலக் கொடிய
அம்பு என்க. தாரை - ஒழுங்குமாம். பி -ம்: மெய்யுருவி.              (147)

10.- இதுவும் அது.

பட்டவரெத்தனையாயிரர்நின்றுபடாமலுயிர்ப்புடன்வென்
னிட்டவரெத்தனையாயிரரஞ்சலினேகுகவென்றமர்வாய்
விட்டவரெத்தனையாயிரர்தங்குலமேன்மையும்வெந்திறலுங்
கெட்டவரெத்தனையாயிரரன்றுகிரீடிதொடுங்கணையால்.

     (இ-ள்.) அன்று - அப்பொழுது, கிரீடி தொடும் கணையால் - அருச்சுனன்
எய்த அம்புகளால், பட்டவர் - இறந்த பகைவீரர் எதனை ஆயிரர் -
மிகப்பலவாயிரந்தொகை யுடையார்; நின்று- ( எதிரில் நிலைத்து) நின்று, படாமல் -
இறவாமல், உயர்ப்புடன்- உயிருடனே, வென் இட்டவர்- முதுகு கொடுத்தவர்கள்,
எத்தனை