பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்101

கிளை உறவு உடையை - மிகுந்த சிநேகிதர்களையும் பந்துக்களையு முடையாய்;
சத்ய குணம் வரை உடையை - உண்மைக்குணத்தின் அளவையுடையாய்; எ
திசைஉம் - எல்லாத்திக்குக்களிலும், வழு அற - பழிப்பில்லாமல், வளர்த்த -
வளரச்செய்த, புகழ் வரிசை - கீர்த்தியின் மேன்மையை, கொள் - கொண்ட ,
அறத்து இளைஞர் - தருமநெறிதவறாத தம்பிமார், வழிபடும் - கீழ்ப்பட்டு
நடக்கிற,மதிப்பு உடையை - கௌரவத்தை யுடையாய்; நிலவு உமிழ் -
சந்திரகாந்தியைப்போன்ற காந்தியை வீசுகிற, முத்தம் குடை - முத்துக்களாலாகிய
குடை, நிழற்ற - நிழலைச்செய்யும்படி, தரைமுழுதுஉம்- பூமிமுழுவதையும்,
ஒருதனி -ஒப்பில்லாமல் தானொருவனாகவே, நனி புரக்கும் - நன்றாக
அரசாளுகிற, உயர்தலைமை - உயர்ந்த அதிகாரத்தை, பெறுகிற்றி - பெற
விருக்கிறாய்; (இப்படிப்பட்ட நீ),பகை - பகைவர்கள், கரை அழகிய -
எல்லையில்லாதபடி, உற்றபொழுது -வந்துநெருங்கியபொழுதில், உயிர் கொடு
புறக்கிடுதல் - (மானத்தைக் காத்துக்கொள்ளாமல்) உயிரைக் (காத்துக்) கொண்டு
முதுகுகொடுத்தல், உனக்கு -, கடன்அல - முறைமையல்ல; (ஆதலால்), நிலை
கருதி - (புறங்கொடாமல்) நிலைபெறுதலைஎண்ணி, அணிநிற்றி - சேனையில்
நிலைநிற்பாயாக', எனா - என்று (கர்ணன்)சொல்ல,- (எ -று.)- "மதித்து" என
மேற்கவியோடு தொடரும்.                                      (184)

94.- கர்ணன்சொல்லைமதித்துத் தருமன்நிற்க, வீமன் தருமனையடுத்தல்.

கருதியணிநிற்றியெனவுறுதிசமரத்துரைசெய் கருணனைமதித்து
                         மிகுகருணையவனிற்பளவில்,
விருதர்தலையற்றுருளவிருதர்மதவத்திகளின்விரிதலைகளற்
                        றுருளவிறலிவுளிமெய்த்துணிய,
விரதம்வயிரச் சுருளைமுடிகொடலையற்றுருளவிருபுறமுமிட்ட
                 விறலொருகைகடைகொடெ ற்றியெதிர்,
பொருசமர்முருக்கிவருபுரையில்பவனக்கடவுள் புதல்வனொ
            ரிமைப்பொழுதின் முதல்வனையடுத்தனனே.

     (இ - ள்.) 'கருதி ஆலோசித்து, அணி - படைவகுப்பில், நிற்றி - நிலை
நிற்பாய்', என - என்று, உறுதி உறுதியானவார்த்தைகளை, சமரத்து - போரில்,
உரைசெய் - சொன்ன, கருணனை - கர்ணனை, மதித்து - நன்கு மதித்து, மிகு
கருணையவன் - மிகுந்த அருளையுடைய தருமன், நிற்பு அளவில் - நிற்கிற
சமயத்தில்,- விருதர் - காலாள்வீரர்களது, தலை -தலைகள், அற்று - அறுபட்டு, -
உருள - புரளவும், விருதர் - வீரர்களது, மதம் அத்திகளின் - மதயானைகளின்,
விரிதலைகள் - பரந்த தலைகள், அற்று உருள - அறுபட்டுப், புரளவும், விறல்
இவுளி -வலிமையையுடைய குதிரைகளின், மெய் - உடம்பு, துணிய - அறுபடவும்,
இரதம் -தேர்களின், வயிர் அச்சு - வயிரம் பொருந்திய அச்சும், உருளை -
சக்கரங்களும்,முடி கொள் தலை - கலசத்தைக் கொண்ட மேல்முகடுகளும், அற்று
உருள -அறுபட்டுப்புரளவும்,- விறல் இட்ட - வெற்றி பொருந்திய, ஒரு கதை
கொடு -ஒப்பற்ற (தனது சத்துருகாதினி யென்னுங்) கதாயுதத்தைக்கொண்டு , இரு,
புறம்உம் -இரண்டுபக்கங்களிலும், எற்றி - தாக்கி, எதிர் பொரு சமர் -
எதிர்த்துச்செய்கிறபோரில், முருக்கி வரு - (பகைவர் சேனையை) அழித்துவருகிற,
புரை இல் -குற்றமில்லாத, பவனக்கடவுள் புதல்வன் - வாயுதே