வனது புத்திரனான வீமன், ஒர் இமைப்பொழுதில் - ஒரு நொடிப் பொழுதுள்ளே, முதல்வனை - தமையனான தருமனை, அடுத்தனன் - சமீபித்தான்;(எ - று.)- வயிர்-வயிரம் என்பது விகாரப்பட்டது. (185) வேறு. 95.-வீமன் வந்திட்டதுகண்டு, சல்லியன், வீமனைவேறலரிதெனல். முதல்வன்வென் னிடுதல் கண்டு முடியுடை வேந்த ரோடும் விதலையில் வயிர நெஞ்சின் வீமன்வந் துறலுங் காலின் புதல்வனைப் பொருது வேற லரிதெனப் பொலம்பொற்றேரோன் மதலையை நோக்கிப் பாகன் வன்பகை தோன்றச் சொன்னான். |
(இ-ள்.) முதல்வன் - தருமன், வென் இடுதல் - புறங்கொடுத்தலை, விதலை இல் - (அச்சத்தால்) நடுங்குத லில்லாத, வயிரம் - உறுதியையுடைய, நெஞ்சின் - மனத்தையுடைய, வீமன்-, கண்டு-,முடி உடை வேந்தரோடுஉம் - கிரீடத்தையுடைய அரசர்களோடும், வந்து உறலும் - வந்து சேர்ந்தவுடனே,-பொலம் பொன்தேரோன் -அழகிய பொன்னிறமான தேரையுடைய சூரியனது, மதலையை நோக்கி - குமாரனான கர்ணனைப்பார்த்து, பாகன் - சல்லியன், 'காலின் புதல்வனை - வாயுபுத்திரனான வீமனை, பொருது - போர்செய்து, வேறல் - வெல்லுதல், அரிது -அருமையானது,' என - என்று வன் பகை தோன்ற - பகையின் வலிமை தோன்றும்படி, சொன்னான்-;(எ - று.)-'காலின் புதல்வன்' என்றது, தந்தையாகிய வாயுவைப்போலவே மைந்தனாகிய வீமனுந் தடுத்தற்கரிய வலிமையையுடையவ னென்றற்கு. இது முதல் இருபத்தைந்து கவிகள் - கீழ்ச்சருக்கத்தில் 12 -ஆம் கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (186) 96.-கர்ணன் வீரவாதம். காமனேயென்னநின்றகன்னன்விற்கையில்வாங்கி வீமனேயாகவென்றிவிசயனேயாகவெற்றித் தாமனேகாண்டியிற்றைச்சமரிலென்றழல்வாயொற்றைத் தூமநேர்பகழிக்காற்றார்தூண்டுதியிரதமென்றான். |
(இ-ள்.) காமன்ஏ என்ன நின்ற - மன்மதனேபோல நின்ற, கன்னன்-, வில் கையில் வாங்கி-வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, (சல்லியனைநோக்கி), 'வெற்றிதாமனே-ஜயமாலையையுடையவனே! வீமன்ஏ ஆக - வீமன் தானாவது, வென்றிவிசயன் ஏ ஆக - வெற்றியையுடைய அருச்சுனன் தானாவது, என் - எனது, தழல்வாய் - நெருப்புப்போன்ற முனையையுடைய, தூமம் நேர் - புகைகிளம்பப்பெற்ற,ஒற்றை பகழிக்கு - ஒருபாணத்துக்கு, ஆற்றார்- முன் நிற்கமாட்டார்கள்; இற்றைசமரில் - இன்றையுத்தத்தில், காண்டி - பார்ப்பாய்; இரதம் - தேரை, தூண்டுதி -செலுத்துவாய், என்றான் - என்று சொன்னான்; (எ-று.) காமன் - ஒப்புயர்வில்லாத கட்டழகுக்கும், விலக்குதற்கரிய அம்பெய்தற்கும் உவமை.ஆக என்னுஞ் சொல் இரண்டும், விகற்பப்பொருளில்வந்த இடைச்சொற்கள். (187) |