கர்ணனை மத்திரம் தலைவன் - மத்திர நாட்டாரசனான சல்லியன், தேற்ற - மூர்ச்சைதெளியச்செய்ய,-ஏழ் பரி தேரோன் மைந்தன் - ஏழுகுதிரையையுடைய தேரையுடைய சூரியனது மகனான கர்ணன், பின்-பின்பு எழுந்து - எழுந்திருந்து, சாபம் வாங்கி - வில்லை வளைத்து, சூழ் படை வீரர் யார்உம் - சூழ்ந்த சேனையிலுள்ள வீரர்களெல்லாம், துஞ்சிட - இறக்கும்படி, துணித்திட்டான் - பிளந்துவிட்டான்; ( எ - று.) (190) 100.- கர்ணனம்பால் மிகப்பலவீரரும் சிங்கசேனன்முதலிய பாஞ்சாலரெழுவரும் மாய்தல். கைத்தலவண்மைவேந்தன்கார்முகம்பொழிந்தவம்பா லெத்தனைநிருபர்மாய்ந்தாரெண்ணுதற்கியாவர்வல்லார் பத்திகொள்சாதுரங்கப்படைஞர்பாஞ்சாலர்தம்மிற் செத்தனரெழுவர்சிங்கசேனனையுள்ளிட்டாரே. |
(இ-ள்.) கைத்தலம் - கைகளினாற் செய்கிற, வண்மை - தானத்தையுடைய, வேந்தன் - கர்ணனது, கார்முகம் - வில், பொழிந்த - சொரிந்த, அம்பால் - அம்புகளினால், எத்தனை நிருபர் மாய்ந்தார் - எத்தனை அரசர்கள் இறந்தார்கள்? எண்ணுதற்கு யாவர் வல்லார் - (இறந்தவர்களைக்) கணக்கிடவல்லவர்கள் யாவர்? பத்தி கொள் - வரிசையைக்கொண்ட, சாதுரங்கம் படைஞர் - சதுரங்கசேனையை யுடையவர்களாகிய, பாஞ்சாலர் தம்மில் - பாஞ்சால நாட்டரசர்களுள், சிங்கசேனனைஉள்ளிட்டார் - ஸிம்ஹசேனனுட்பட்டவர்களாகிய, எழுவர் - ஏழுபேர், செத்தனர்-;(எ-று.)- எழுவர்-சிங்கசேனனும், 83-அம் கவியிற் கூறிய அறுவரும்எனத்தோன்றுகின்றது. (191) 101.-வீமனும் சேனையோடுபுறக்கிட அருச்சுனன் அங்கு வந்துசேர்தல். சேனையுமுரிந்துவீமசேனனுமுதுகிட்டோட கானமர்துளவோன்கண்டுகடும்பரிநெடுந்தேர்தூண்ட யானைமேற்சிங்கஞ்செல்வதென்னவந்தெய்தியிட்டான் வானவர்க்கரசன்மைந்தன்மைந்துடைவரிவில்லோனே. |
(இ-ள்.) சேனையும்-, முரிந்து - அழிந்து, வீமசேனனும் முதுகிட்டுஓட-, கான் அமர் துளவோன் - காட்டிற்பொருந்திய திருத்துழாய்மாலையையுடைய கண்ணன், கண்டு-, கடு பரி நெடு தேர் தூண்ட - விரைந்தோடுகிற குதிரைகளைப் பூட்டிய பெரிய தேரை ஓட்ட, வானவர்க்கு அரசன் மைந்தன் - தேவேந்திரனது குமாரனும், மைந்து உடை வரி வில்லோன் - வலிமையையுடைய கட்டமைந்த வில்லையுடையவனுமாகிய அருச்சுனன், யானைமேல்-, சிங்கம்-, செல்வது என்ன- (போருக்குப்) போவதுபோல, வந்து எய்திட்டான் - (கர்ணன்மேல்) வந்துசேர்ந்தான்; (எ - று.) (192) 102.- அருச்சுனகர்ணரின் அம்புகள் வானத்தைமூடுதல். சென்றவன் சேனைதன்னினிருபருஞ்செருச்செய்கிற்பா னின்றவன்சேனைதனனினிருபருதேர்ந்தகாலை |
|