பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்107

மீனவன்வழுதிமாறன்வெண்மதிமரபில்வந்தோன்
வானவர்முதல்வன்சென்னிவரிவிளையுடைத்துமீண்டோன்,

இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்

     (இ-ள்.) போன - (இவ்வாறு அழிந்து) போன,  அ புரவித் தாமா -அந்த
அசுவத்தாமன், புரிந்து - (மீண்டும் வந்து)  விரும்பி, போர் தொடங்கும் எல்லை-
யுத்தத்தை ஆரம்பிக்கும் பொழுதில், வெண் மதி மரபில் வந்தோன் -
வெண்ணிறமுள்ள சந்திரனது குலத்திற்பிறந்தவனும், வானவர் முதல்வன் -
தேவேந்திரனது, சென்னி-முடியை, வரி வளை-கோடுள்ள வளையினால்,
உடைத்து -உடையச் செய்து (வென்று) நீண்டோன் - திரும்பினவனும், மீனவன்-
மீனக்கொடியையுடையவனும், மாறன் - (பகைவர்களுக்கு) மாறாக இருப்பவனும்
ஆகிய, சித்திரவாகனன் என்னும் வழுதி - சித்திர வாகனன் என்னும்பாண்டியன்,
சேனைகள் நான்கினோடுஉம் - நால்வகைச்சேனைகளுடனே,-(எ - று.)-"சென்று"
எனமேற் கவியோடு இயையும்.

     சித்திரவாகன் = சித்திரவாகனன்; பலவகை வாகனங்களையுடையவன்;
இவன்மகளாகிய சித்திராங்கதையென்பவளை அருச்சுனன்
தீர்த்தயாத்திரைசென்றபொழுது மணஞ்செய்துகொண்டானாதலால், இவன்,
அருச்சுனனுக்கு மாமனாவன், மலயத்துவச பாண்டியன்மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம்புரிந்துகொண்ட
சிவபெருமான், அவளிடந் தமக்குப் பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி, அவனுக்குப் பகையாகுங் கடலையும் இந்திரனையும் மேருவையும்
வெல்லுமாறு, வேலும் வளையுஞ் செண்டும் அளித்துப்போயினர், பின்னர் அவன்,
தன்நகர்மேற்பொங்கியெழுந்த ஏழுகடல்களையும் வேலெறிந்துவற்றச் செய்து
வென்றான்; ஒருகாலத்தில் தன்நாட்டிற் பொதியமலையில்  மேய்ந்திருந்த
மேகங்களைப் பிடித்துத் தளைசெய்து, அதுகேட்டுத் தன்னை எதிர்த்து யுத்தஞ்
செய்ததேவேந்திரன்மீது வளையையெறிந்து மகுடபங்கப்படுத்திச்சயித்தான்;
மற்றொருகால்தன்  நாட்டிற் பஞ்சம் நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து
நிதிதேடி அதுஇருக்குமிடந்தெரியாமல் அதன்மேற்செண்டைவீசி, அதற்கு
ஆற்றாமல்அம்மலையரசன் எதிரில்வந்து கொடுத்த பொருள்களையெல்லாம்
பெற்றுவந்தானென்பது, கதை, சித்திரவாகனனும் உக்கிரகுமாரனும்
ஒரேகுலத்தவராதலால், உபசாரவழக்காக இங்ஙனங் கூறினார்.         (198)

108.சென்றெதிரூன்றிவெவ்வேற்சேயனான்றேரின்மேலும்
வன்றிறல்வலவன்மேலும்வாம்பரிமாவின்மேலுந்
துன்றியகணைகளேவித்தொடுசிலைதுணித்துவீழ்த்தா
னன்றவன்செய்தவீரமரசரிலார்செய்தாரோ.

     (இ-ள்.) எதிர் சென்று - எதிரிற் போய், ஊன்றி - தாக்கி, வெம்
வேல்சேய் அனான் - கொடிய வேலையுடைய முருகக்கடவுளைப் போன்ற
அசுவத்தாமனது, தேரின்மேலும்-, வன் திறல் - மிகுந்த