(இ-ள்.) பேர் அணிகலம் சேர் மார்பன் - பெரிய ஆபரணங்கள் பொருந்திய மார்பினையுடைய கர்ணனால், பேர் அணி ஆக்கி நின்ற - பெரியவகுப்பாகப் பகுக்கப்பட்டுநின்ற, போர் அணி மிக்க சேனை - யுத்தத்தையே (தனக்கு) அலங்காரமாகக்கொண்ட மிகுந்த சேனையினது, பொலிவு - விளக்கத்தை, கண்டு - பார்த்து,- ஒலி கொள்வண்டு ஆர் - ஒலித்தலைக்கொண்ட வண்டுகள் மொய்க்கின்ற, தார் அணி அலங்கல் - மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய, மௌலி - முடியினையுடைய, தருமன் மா மதலை - சிறந்த தருமபுத்திரனது, சேனை-,-ஓர் அணி ஆக கூடி - ஒருதிரளாகச் சேர்ந்து, உடன்று - கோபித்து, எதிர் நடந்தது - எதிரே சென்றது; (எ -று.) பேரணிகலஞ்சேர்மார்பன் - வீரர்க்குச்சிறந்த ஆபரணமெனப்படுகின்ற போரிற்படும் பெரும்புண்கள் பொருந்திய மார்பையுடையா னெனினுமாம். (19) வேறு. இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்களை வருணிக்கின்றார். 20.- யானை வருணனை. மகரி கையுமிரு பணைகளும் விரிநுதன் மருவு கலனொடு மினலெனவொளிவிட, விகலி யளிமுர லிருகவு ளினுமுட னிழியு மதமழை குமிழிக ளெழவெழ வகல முடையன முதுகிரு புடையினு மணியுமணிகண கணவென வதிர்தரு, ககன முகிலென வுயர்வடி வுடையனகதியின் விததியின் முடுகின கரிகளே. |
(இ-ள்.) மகரிகைஉம் - பூண்களும், இரு பணைகள்உம் - (அவற்றை அணிந்த)இரண்டுதந்தங்களும், விரி நுதல் மருவு கலனொடு - பரந்த நெற்றியிலே அணிந்த(பட்டம்முதலிய) ஆபரணங்களுடனே, மினல் என - மின்னல்போல, ஒளி விட -ஒளியை வீசவும்,- அளி - வண்டுகள், இகலி - நெருங்கி [மாறுபட்டு](மொய்த்து),முரல் - ரீங்காரஞ்செய்தற்கு இடமான, இரு கவுளின்உம் - இரண்டுகன்னங்களினின்றும், உடன் இழியும் - ஒருங்குபெருகுகின்ற, மதம் மழை - மதநீர்வெள்ளம், குமிழிகள் எழ எழ - குமிழிகள் மிகுதியாக உண்டாகப்பெறவும்,- அகலம் உடையன - பரப்பையுடையனவாகிய, முதுகு இருபுடையின்உம் - முதுகின் இரண்டுபக்கங்களிலும், அணியும் - அணியப்பட்டுள்ள, மணி - மணிகள், கணகண என - கண கண என்று ஒலிக்கவும்,- அதிர்தரு ககனம் முகில் என - இடி முழங்குகின்ற வானத்திற்செல்லும் மேகங்கள்போல,- உயர் வடிவு உடையன கரிகள் - உயர்ந்த உருவத்தையுடையனவாகிய யானைகள், - கதியின் விததியின் - பலவகைநடைவிகற்பங்களோடு, முடுகின - விரைந்துசென்றன; (எ - று.) கரிய யானைகள் - காளமேகத்துக்கும், தந்தங்களும் ஆபரணங்களும் - மின்னலுக்கும், மதமழை - நீர்மழைக்கும், மணியோசை - இடி யோசைக்கும் உவமை. இவற்றில், ஈற்றெழுத்துஒழிய மற்றை உயி |