வற்றுவித்தா னென்னும் உவமையணி தொனிக்கின்றது, 'காலினாற் றுகைத்து' என்றது- மதுரையை அழிக்கப் பொங்கிவந்த சமூத்திரம் தன்கால்வடிவம்பலம்பப் பாண்டியன்நின்றமையைக் குறிக்கும்; 'காலினாற் றுகைத்' என்னும் பாடத்துக்கு - காற்றினால்மோதப்பட்டு வந்த கடலென்க. (202) 112.-ஏழுகவிகள்-அசுவத்தாமனோடு பொருது பாண்டியன் வீழ்ந்திடுதலைக்கூறும். சங்கரனருளால்வந்தசதுர்மறைக்குமரன்மீளப் பொங்கழற்கடவுளென்னப்பொருசிலைவெய்தின்வாங்கி மங்குல்போற்பொழியும்வாளிமழையினாலழிந்ததந்தோ செங்கயனெடும்பதாகைத்தென்னவன்செம்பொற்றேரே. |
(இ-ள்.) சங்கரன்- சிவபிரானது, அருளால் - கருணையினால், வந்த - பிறந்த,சதுர் மறை குமரன் - நான்குவேதங்களும்வல்ல அசுவத்தாமன், மீள - மறுபடியும்,பொங்கு அழல் கடவுள் என்ன- பற்றியெரிகிற அக்கினிதேவன்போல், வெய்தின் -பயங்கரமாக, பொரு சிலை - போர்செய்தற்குரிய வில்லை, வாங்கி - வளைத்து,மங்குல் போல் - மேகம்போல, பொழியும் - சொரிகிற, வாளி மழையினால் -பாணவர்ஷத்தால், செம் கயல் - செவ்வியமீனை எழுதிய, நெடு பதாகை-பெரியகொடியையுடைய, தென்னவன் - பாண்டியனது, செம் பொன் தேர் - சிவந்தபென்னினாலாகியதேர், அழிந்தது-;(எ-று.) அந்தோ - இரக்கக்குறிப்பு. (203) 113. | சிங்கவேறனையானந்தத்தேரின்றிழிந்துமுன்னந் தங்கண்மால்வரையில்வைகுந்தமிழ்முனிதன்னைப்போலப் பொங்குவெண்டரங்கமுந்நீர்ப்புணரிகளேழுஞ்சேர வெங்கையால்வாருங்கொற்றவேழமாமேற்கொண்டானே. |
(இ - ள்,) சிங்கம் ஏறு அனையான் - ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டியன், அந்த தேரினின்று இழிந்து-, முன்னம்-முன்னே, தங்கள் மால் வரையில் வைகும் தமிழ் முனிதன்னை போல - தங்கள் நாட்டிலுள்ள பெரிய பொதியமலையில் வாழ்கிறதமிழைப் பரவச்செய்த அகத்தியமுனிவர் (கடலைக்குடித்தது) போல, பொங்குவெண்தரங்கம் - (மேல்மேற்) பொங்குகிற வெண்மையான அலைகளையுடைய, முந்நீர்-மூன்றுதன்மையையுடைய, புணரிகள் ஏழ்உம் - ஏழுகடல்களையும் சேர -ஒருசேர, வெம் கையால் - வெப்பத்தையுடைய துதிக்கையால், வாரும் -முகந்துகொள்ளவல்ல, கொற்றம்-வெற்றியையுடைய, வேழம் மா மேற்கொண்டான் -யானையாகிய விலங்கின் மேல் ஏறிக்கொண்டான்; (எ - று.) இந்திரன்முதலிய தேவர்கள் தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும் பல அசுரர்களுடனே கடலில் ஒளித்துக்கொண்ட போது, அகத்தியமகாமுனிவரை வந்து பிரார்த்திக்க, அவர் அக்கடலினீரைத் தமது ஒருகையால் முற்றும் முகந்து பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்ற பின், |