அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் உமிழ்ந்தனரென்பது கதை; நீர்மையென்னும்பண்புப்பெயர், ஈறுபோய் 'நீர்' என நின்றது: முந்நீர்-மூன்று நீர்மையை [தன்மையை]யுடையதுஎனக் கடலுக்குப் பண்புத்தொகையன்மொழி; மூன்றுதன்மைகள் -பூமியைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன; நீரினின்று நிலம் பிறந்ததெனவேதம் ஓதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலின் காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களுங் கடலுக்கு உரியனவாயின, 'முந்நீரினுள்புக்குமூவாக் கடம்பெறித்தான்' என்றவிடத்து அடியார்க்குநல்லாருரை காண்க. (204) 114. | மலையினிற்பிறந்தவாரமணங்கமழ்வடிவிற்றங்க ளலையினிற்பிறந்தவாரமழகுறவணிந்தகோமான் கொலையினிற்சிறந்தகோட்டுக்குஞ்சரங்கொண்டுமீண்டுஞ் சிலையினிற்குருவின்மைந்தன்றேரொடுஞ்செருச்செய்தானே. |
(இ - ள்,) (தங்கள்) மலையினில் பிறந்த - தங்கள் நாட்டிலுள்ள மலயபருவதத்தி லுண்டான, ஆரம் - சந்தனத்தின், மணல் கமழ்- வாசனைவீசுகிற, வடிவில்-உடம்பிலே, தங்கள் அலையினின்-தங்கள் கடலிலே, பிறந்த-தோன்றின, ஆரம் முத்துக்களினாலாயமாலையை, அழகுஉற - அழகுபொருந்தும்படி, அறிந்த - தரித்த, கோமான் - பாண்டியராசன், கொலையினில்சிறந்த - கொல்லுதற்றொழிலிலேமிகுந்த, கோடு - தந்தங்களையுடைய, குஞ்சரம் கொண்டு- யானைமேல் ஏறிக்கொண்டு-மீண்டுஉம்-மறுபடியும், சிலையினில் - வில்லினால், குருவின் மைந்தன் தேரொடுஉம் - துரோண புத்திரனது (அசுவத்தாமனது) தேருடனே, செரு செய்தான்-போர் செய்தான்; (எ -று) (205) 115. | மோதியமத்தாரைமாறாக்கைம்முகமுகுத்தசெக்கர்ச் சோதிமத்தகவெங்குன்றின்றழைசெவித்துளங்குகாற்றாற் சாதிமைத்துரோணன்மைந்தன்றனித்தடந்தேரிற்கொற்ற வோதிமப்பதாகையாடையப்புறத்தொடுங்கிற்றம்மா. |
(இ-ள்.) மோதி மத் தாரை மாறா - (மேன்மேற்) பெருகி மதநீர்ப்பெருக்கு இடையறாத, கை முகம் உகுத்த செக்கர் சோதி-துதிக்கையையுடைய முகத்தினின்று வெளிப்படுத்துக்கொண்டிருக்கிற (புள்ளிகளின்) சிவந்த ஒளியையும், மத்தகம் - மஸ்தகத்தையுமுடைய, வெம் குன்றின் - கொடிய மலைபோன்ற (பாண்டியனேறிய) யானையின், தழை செவி துளங்கு காற்றால் - தழைந்த காதுகள் அசைதலாலுண்டாகிய காற்றினால், சாதிமை துரோணன் மைந்தன் - உயிர்குடிப்பிறப்பையுடைய அசுவத்தாமனது தனி தட தேரில் - ஒப்பற்ற பெரிய தேரிலுள்ள, கொற்றம் - வெற்றிக்கு அடையாளமான, ஓதிமம் - அன்னத்தின் வடிவத்தை எழுதிய, பதாகை ஆடை - கொடிச்சீலை, அப்புறத்து ஒடுங்கிற்று - பின் ஒதுங்கியது; (எ - று.)-இதனால், பாண்டியன் யானையின் உயர்ச்சியும் வலிமையுந் தொனிக்கின்றது. அம்மா - வியப்பு.
|