பக்கம் எண் :

112பாரதம்கன்ன பருவம்

     மததாரை - மத்தாரையென விகாரமாயிற்று. மதநீர் வெம்மையுடைய தெனக்
கூறப்படுவதனால், மோது - மோதுகின்ற, இமத்தாரை - குளிர்ந்த மததாரை யென்று
கூறுவது பொருந்தாதெனத் தோன்றுகின்றது.                          (206)

116.கூற்றெனக்கொண்டலென்னக்குரைகடலென்னச்சூறைக்
காற்றெனக்கொடியகோபக்கடும்பெருங்கரடமாவி
னூற்றெழுமதங்களேழுமொழுகிமண்ணுடைந்துதாழுஞ்
சேற்றிடைப்புதைந்ததந்தச்சேயனான்றேரின்காலே.

     (இ -ள்.) கூற்று என - யமன்போலவும், கொண்டல் என்ன - நீர்கொண்ட
மேகம்போலவும், குரை கடல் என்ன - ஒலிக்கிற கடல் போலவும், சூறை காற்று
என- சுழல்பெருங்காற்றுப்போலவும், கொடிய - கொடுந்தன்மையையுடைய,
கோபம் -(அடங்காத) கோபத்தையுடைய, கடு - விரைவையுடைய, பெரு - பெரிய,
கரடம் -கன்னங்களையுடைய, மாவின் - (பாண்டியனது) யானையினின்றும், ஊற்று
எழும் -ஊற்றெடுத்துப் பெருகுகிற, மதங்கள் ஏழ்உம் - எழுவகை மதங்களும்,
ஒழுகி -பொழிவதனால், மண் உடைந்து - மண்கரைந்து, தாழும் -
ஆழமாகவுண்டாகிய,சேற்றிடை - செற்றியே, அந்த சேய் அனான் தேரின்கால் -
முருகக்கடவுளைப்போன்ற அந்த அசுவத் தாமனது தேர்ச்சக்கரம், புதைந்தது -
அழுந்திற்று; (எ-று.)                                            (207)

117.மறையவன்செம்பொற்றேரைவளைந்துமண்டலங்களோட்டிப்
பிறைமுகக்கணையாலந்தண்பிறைக்குலவழுதியெய்ய
நிறைவறப்புரவித்தாமாநேருறவிலக்கித்தன்கை
யறைசிறைப்பகழியொன்றாலானையைவீழ்வித்தானே.

     (இ-ள்.) அம் தண் பிறை குலம் - அழகிய குளிர்ந்த சந்திரனது மரபில்
தோன்றிய, வழுதி - பாண்டியன், மறையவன் செம்பொன் தேரை - வேதம்வல்ல
அசுவத்தாமனது செம்பொன்மயமான தேரை, வளைந்து - சூழ்ந்து, மண்டலங்கள்
ஓட்டி - (யானையை) மண்டலகதிகளாகச் செலுத்தி, பிறை முகம் கணையால் -
அர்த்தசந்திர பாணங்களால், எய்ய-, புரவித்தாமா-, (அவ்வம்புகளையெல்லாம்),
நிறைவு அற - (வந்து) நிறைதலில்லையாம்படி, நேர் உற - எதிரிலே பொருந்த,
விலக்கி - (தன் அம்புகளால்) தடுத்து, தன் கை அறை - தனது கையினால்
வலிவாகவிடப்பட்ட, சிறை - இறகுகளையுடைய, பகழி ஒன்றால் - ஒருபாணத்தால்,
ஆனையை-, வீழ் வித்தான் - கீழே கொன்றுதள்ளினான்; (எ-று.)           (208)

118.பாண்டியன்கைவில்லோடும்பதாதியாய்ப்பகழிசிந்தி
யீண்டியவிவுளித்தாமனிருதடந்தோளுமார்பும்
வேண்டியவாறுசோரிவீழ்தரப்பொருதபின்னர்த்
தூண்டியதுரோணன்மைந்தன்றொடையொன்றாற்றுனும்வீழ்ந்தான்

     (இ-ள்.) பாண்டியன்-, கை வில்லோடுஉம் - கையிற்பிடித்த வில்லுடனே,
பதாதிஆய் - (வாகனமில்லாமற்) காலாளாகி, பகழி சிந்தி - அம்புகளைப் பெய்து,-
ஈண்டியஇவுளித்தாமன் - நெருங்கின அசுவத்தாமனது, இரு தட தோள்உம் -
இரண்டுபெரிய தோள்