பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்113

களிலும், மார்புஉம் - மார்பிலும், வேண்டிய ஆறு - வேண்டியபடியெல்லாம் [மிக
அதிகமாக என்றபடி], சோரிவீழ்தர - இரத்தம் பெருகும் படி, பொருத பின்னர் -
போர்செய்தபின்பு, துரோணன் மைந்தன் தூண்டிய- அசுவத்தாமன் பிரயோகித்த,
தொடை ஒன்றால் - அம் பொன்றினால், தான்உம் வீழ்ந்தான் - தானும்
இறந்துவிழுந்தான்; (எ -று.)- வேண்டியவாறு பொருதபின்ன ரென்று இயைப்பினுமாம்.
                                                               (209)

119.-பாண்டியன்இறக்கவே பாண்டவசேனையார் வென்னிட,
மற்றையோர் கடுமையாகப் பொருதல்.

பட்டனன் முனிவன் கையிற் பஞ்சவ னென்று வேந்தர்
கெட்டனர் முரசந் தீட்டுங் கேதனன் சேனை யுள்ளார்
தொட்டனர் வரிவில் வாளி தொடுத்தன ரடுத்து மேன்மேல்
விட்டனர் வேந்தர் வேந்தன் சேனையில் வேந்த ருள்ளார்.

     (இ-ள்.) 'முனிவன் கையின் - அசுவத்தாமனது கையால், பஞ்சவன் -
பாண்டியன், பட்டனன் - இறந்தான்,' என்று-, முரசம் தீட்டும் கேதனன் சேனை
உள்ளார் - முரசத்தை யெழுதிய கொடியையுடைய தருமனது
சேனையிலுள்ளவர்களான, வேந்தர் - அரசர்கள், கெட்டனர் - வலியழிந்தார்;
வேந்தர் வேந்தன் சேனையில் உள்ளார் - துரியோதனனது சேனையிலுள்ளவரான,
வேந்தர் - அரசர்கள், (பாண்டியனிறந்தானென்றுகளித்து), வரி வில் தொட்டனர் -
கட்டமைந்த வில்லை எடுத்து, வாளி தொடுத்தனர் - பாணங்களைத் தொடுத்து,
மேல்மேல் அடுத்து விட்டனர் - மேலே மேலே நெருங்கி விட்டார்கள்;(எ-று.)

     'பட்டனன் முனிவன்கையிற்பஞ்சவனென்று' என்னுங் காரணத்தைப்
பின்வாக்கியத்தோடுங் கூட்டுக. கெட்டனர் - காணாமலோடினாரென்றுமாம்.  (210)

வேறு.

120.-அசுவத்தாமன்முன் சோழன் றோன்றுதல்.

விற்கையா ரியன்மகன் விசும்பின் வீழ்தரு
முந்தையா மெனவிடு மொளிகொள் வாளியாற்
கொற்கையா னிறந்தபின் கோழி யானெனுஞ்
சொற்கையா மனுகுலத் தோன்ற றோன்றினான்.

     (இ-ள்.) வில் கை - வில்லேந்திய கையையுடைய, ஆரியன் மகன் -
ஆசாரியபுத்திரனான அசுவத்தாமா, விசும்பின் வீழ்தரும் உற்கை ஆம் என -
ஆகாயத்தினின்று விழுகிற எரிகொள்ளி போல, விடும் - விட்ட, ஒளி கொள்
வாளியால் - ஒளியைக்கொண்ட அம்பினால், கொற்கையான் - கொற்கையென்னும்
ஊரையுடைய பாண்டியன், இறந்தபின்-,-கோழியான் எனும் - சோழனென்கிற,
சொல்கையா - சொல் வெறுக்காத, மனு குலம் தோன்றல் - மனு மரபில்
தோன்றியஅரசன், தோன்றினான் - வந்தான்; (எ - று.)