126. | புகலருமறையவன்புராரியாதியாந் திகழொளியிமையவர்சிறப்பினீந்தன விகன்முனைமுனையுறவெதிர்ந்துதள்ளேவ யகல்வெளிபுதைத்தனவம்புமம்புமே. |
(இ-ள்.) புகல் அரு - (சிறப்பித்துச்) சொல்லுதற்கு அரிய, மறையவன் - அசுவத்தாமன், புராரி ஆதி ஆம் - சிவன்முதலான, திகழ் ஒளி இமையவர் - விளங்குகிற ஒளியையுடைய தேவர்கள், சிறப்பின் ஈந்தன - சிறப்பாகக் கொடுத்த அஸ்திரங்களை, இகல் முனை - போர்க்களத்தில், முனை எதிர்ந்து உற - முன்னே எதிர்ந்து செல்லும் படி, தள்ள - பிரயோகிக்க,- அம்புஉம் அம்புஉம் - (இருவர்) அம்புகளும், அகல் வெளி புதைத்தன - பரந்த ஆகாயவெளியை மறைத்தன; (எ- று.)-மிக அடர்த்தியாகப் பரவின, ஈந்தனவாகிய அம்பும் அம்பும் என்று இயைத்து உரைப்பாருமுளர். (217) 127. | சுரருலகெய்தியதுரோணன்மைந்தனை யிருகணைபுயத்தினுமிரண்டுமார்பினு மொருகணைநுதலினுமுரவவேவினான் மருவிரிதாதகிவாசமாலையான். |
(இ - ள்.) மரு விரி - தேனொழுகுகிற, வாசம் - வாசனையுடைய, தாதகி மாலையான் - ஆத்திப்பூமாலையையுடைய சோழன்,-சுரர் உலகுஎய்திய - (இறந்து) தேவலோகத்தை அடைந்த, துரோணன் - துரோணரது, மைந்தனை - புத்திரனான அசுவத்தாமனை, இரு கணை - இரண்டு அம்புகள், புயத்தின்உம் - தோள்களிலும், இரண்டு - இரண்டு அம்புகள், மார்பின்உம் - மார்பிலும், ஒரு கணை - ஓரம்பு, நுதலின்உம் - நெற்றியிலும், உருவ - துளைக்கும்படி, ஏவினான் - எய்தான்; (எ-று.) (218) 128. | பிறைமுடிச்சடையவன்பிள்ளைவள்ளுகிர் விறலுடைப்புலிக்கொடிவீரன்மெய்யெலாம் புறவினுக்கரிந்தநாட்போலமேல்விடுந் திறலுடைவாளியாற்சிவப்பித்தானரோ. |
(இ -ள்.) பிறை முடி சடையன் - இளஞ்சந்திரனை யணிந்த திரு முடியிலுள்ள(கபர்த்தமென்னுஞ்) சடையையுடையஉருத்திரனது, பிள்ளை - மகனானஅசுவத்தாமன், வள் உகிர் - கூர்மையானநகங்களையும், விறல் உடை - வெற்றியையுமுடைய, புலி - புலியையெழுதிய, எலாம் - உடம்பு முழுவதையும், மேல்விடும் - மேலே பெய்கிற, திறல் உடை - வலிமையையுடைய, வாளியால் - அம்புகளினால், புறவினுக்கு அரிந்த நாள் போல - புறாவைக் காக்கும் பொருட்டு அறுத்துக் கொடுத்த காலத்திலேபோல, சிவப்பித்தான் - சிவக்கச்செய்தான்; (எ-று.)- அரோ- ஈற்றசை. பிள்ளை- இளமைப்பெயர்; "தவழ்பவை தாமு மவற்றோரன்ன" என்னுந் தொல்காப்பியச்சூத்திரத்தில் 'தாமும்' என்றதனால், இது உயர்திணைக்கும் உரியதாதல்கொள்ளப்படும். சோழனுஞ் சிபியும் |