பக்கம் எண் :

118பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) கவனம் - கடைகளையுடைய, மான் - குதிரைகளைப் பூட்டிய, தேர்
உடை - தேர்களையுடைய, காவல் மன்னவர் - (இராச்சியத்தைக்)
காத்தற்றொழிலையுடைய அரசர்கள், அவனொடு - அசுவத்தாமனுடனே, மீள -
திரும்பவும், வந்து-, சிவனொடுஉம் அமர்பொரும்-சிவனோடுபோர்செய்கிற, தெவ்வர்
என்ன - பகைவர்களாகிய அசுரர்கள்போல, துவணி செய் முரசு எழ-ஒலியைச்
செய்கிற முரசவாத்தியங்கள் முழங்கும்படி, அபயன் தன்னொடு- சோழனுடனே,
துன்று போர் - நெருங்கினபோரை, செய்தார்-; (எ - று.)

     அபயன் என்பதற்கு-தன்னைச்சரணமடைந்தவர்களை அஞ்ச வேண்டாமென்று
அபயமளித்துக் காப்பவனென்று பொருள் போலும். சிவனொடுபொரும் பகைவர்.
சோழனோடுபொருது முன்னிற்கமாட்டாமைக்கு உவமை.                  (222)

132.துன்மருடணன்மகன்சுவாகுதுன்முகன்
வின்மகன்சுவாதுவாள்வெயில்விபாகரன்
றன்மகன்றிருமகன்சங்கனென்பவர்
மன்மகார்பலரொடுமடிந்துவீழவே.

இதுமுதல் நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) துன்மருடணன் மகன் - துன்மருடணனது புத்திரனாகிய, சுவாகு-
சுவாகுவும், துன்முகன் வில் மகன் - துன்முகனது ஒளியையுடைய புத்திரனாகிய,
சுவாது - சுவாதுவும், வாள் வெயில்-ஒளியையுடைய கிரணங்களையுடைய,
விபாகரன்தன் - சூரியனது, மகன் - குமாரனாகிய கர்ணனது திருமகன் -
அழகியபுத்திரனாகிய, சங்கன் - சங்கனும், என்பவர் - என்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவராகிய, மன் மகரர் - இராசகுமாரர்கள், பலரொடுஉம் - (மற்றும்)
பலவீரர்களுடனே, மடிந்துவீழ - இறந்து கீழே விழும்படி,-(எ-று.) -"ஏற்ற" என்க.
சுவாகு=சுபாகு; அழகியதோளுடையவன் துன்மருடணன்  துன்முகன்என்று
துரியோதனன்தம்பிமார்கள், பி-ம்: துன்மருடன்.                     (223)

133.பண்ணகவிசையளிபாடுதண்டலைக்
கண்ணகன்காவிரிநாடன்கைக்கணை
மண்ணகநெருக்குறமலைந்தமன்னரை
விண்ணகமிடனறவிரைவினேற்றவே.

     (இ-ள்.) பண் அகம் - சுரங்களைத் தம்மிடத்திலுடைய, இசை-
சங்கீதப்பாடல்களை, அளி - வண்டுகள், பாடு - பாடுதற்கு இடமான, தண்டலை -
சோலைகளையுடைய கண்அகல் - இடமகன்ற, காவிரி-காவேரிநதிபாய்கிற, நாடன்-
நாட்டையுடையசோழனது, கை கணை- கையினா லெய்யப்பட்ட அம்புகள், மண்
அகம் நெருக்கு உற - பூமியில் நெருக்க முண்டாம்படி, மலைந்த - (திரண்டுவந்து)
போர்செய்த, மன்னரை - அரசர்களை, விண் அகம் இடன் அற - வீரசுவர்க்கத்தில்
இடம் இல்லையாம்படி, விரைவின்- சீக்கிரமாக, ஏற்ற- ஏறச்செய்ய (கொல்ல)-
(எ- று.)- "மீள" என்க.