பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்119

     இனி, பண் நகஎனப்பிரித்து-பண்கள்விளங்கும்படி வண்டுகள் இசை பாடுகிற
சோலையென்றுமாம்; நக -செயவெனெச்சம். நெருக்கு-முதனிலை திரிந்த
தொழிற்பெயர்.மண்ணகம், விண்ணகம் - அகம், ஏழுனுருபு தண்டலை - தண்தலை;
குளிர்ந்தஇடத்தையுடையது: பண்புத்தொகையன்மொழி.               (224)

134.முன்னிய சிலைமறை முனிவன் மைந்தனுந்
தன்னிக ரிலாவிறற் சகுனி யாதியாய்த்
துன்னிய நிருபருந் தொல்ல மர்க்குநீ
சென்னியென் றவன்புகழ் செப்பி மீளவே.

     (இ-ள்.) சிலை மறை - தனுர்வேதத்தை, முன்னிய - அறிந்த, முனிவன்
மைந்தன்உம் - துரோணகுமாரனான அசுவத்தாமனும், தன் நிகர் இலா -
(சூதாட்டத்தில்) தனக்கு ஒப்பில்லாத, விறல் - வெற்றியையுடைய, சகுனி ஆதி
ஆய்-சகுனி முதலாக, துன்னிய - நெருங்கிவந்த, நிருபர்உம் - அரசர்களும்,
'தொல்அமர்க்கு பழைய போருக்கு, நீ,-சென்னி - தலையாவாய்,' என்று-, அவன்
புகழ் -அச்சோழனது கீர்த்தியை, செப்பி - சொல்லி, மீள - திரும்பிப்போய்விட,-
(எ-று,.)- "அடுத்தார்" என மேலிற்கவியோடு முடியும். 'சென்னி' என்பது
சோழனைக்காட்டுவதோர் சொல்: அதற்குக் காரணங் கற்பித்ததுபோற்
கூறியிருக்கும்நயம் பாராட்டத்தக்கது.                              (225)

வேறு.

135,-அப்போது துச்சாதனனும் அவன் தம்பிமார்
ஒன்பதின்மரும் வீமனெதிரேயடுத்தல்.

சோனா மேகம் பொழிவதுபோற் றுச்சா தனனுந் தம்பியரும்
வானா டேற வழிதேடி வருவார் போல வெருவாமன்
மேனாண் மொழிந்த வஞ்சினங்கண் முடிப்பா னின்ற வீமனெதி
ரானா வாளி மழைதூவி யடல்வெஞ் சிலையோ டடுத்தாரே.

     (இ-ள்.) துச்சாதனனும்-, தம்பியர்உம் - அவன் தம்பிமார்களொன்பதுபேரும்,
வெருவாமல் - அஞ்சாமல், அடல் வெம் சிலையோடு - வலிய கொடிய வில்லுடனே,
சோனா மேகம் பொழிவது போல்-விடாப்பெருமழையை மேகம் பெய்கின்றதுபோல,
ஆனா வாளிமழை தூவி - நீங்காத பாணவருஷத்தைச் சொரிந்து கொண்டு, மேல்
நாள் மொழிந்த வஞ்சினங்கள் - முற்காலத்திற் சொன்ன சபதங்களை, முடிப்பான்
நின்ற-நிறைவேற்றும்பொருட்டு நின்ற, வீமன் எதிர்-வீமனுக்கு எதிரில், வான் நாடு
ஏறவழி தேடி வருவார் போல - வீரசுவர்க்கம் அடைவதற்கு வழியைத் தேடி
வருபவர்போல, அடுத்தார் - வந்துசேர்ந்தார்கள்;(எ - று.)-தம்பியர் ஒன்பதின்மர்
என்பது -மேல் 140 - ஆங் கவியால் விளங்கும். மேனாள் - திரௌபதியைத்
துகிலுரிந்தகாலத்தில்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீருங்
காய்ச்சீர்களும்,மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (226)