பக்கம் எண் :

12பாரதம்கன்ன பருவம்

ரெழுத்தனைத்தும் குற்றெழுத்தாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம். விததி -
வடசொல்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்
சீரும்புளிமாச்சீர்களும், மற்றை ஆறும்கருவிளஞ்சீர்களுமாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். 'தனன தனதன தனதன தனதன தனன தனதன
தனதன தனதன' என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.               (20)

21.- தேர்வருணனை.

நிறனின்மிகுகூனநவமணிகளினிய னெடியகொடுமுடிநிகர்வன
                                        மகுடமு,
மறையுமருவுயையுவமைகொள்சவரமு மடவிநிகரெனவசை
                                    வுறதுவசமு,
முறையினறைகமழ்தொடைபடுமலர்களு முடுகுமிட
                        னுடைமுழைகளுமுடையன,
விறகர்கொடுபலமலைதிரிவனவெனவிகலி
                       யிசைபெறநடவினவிரதமே.

     (இ-ள்.) நிறனில் மிகுவன - (தம் தமக்கு உரிய) நிறங்களிற் சிறந்தனவான,
நவமணிகளின் - ஒன்பதுவகை இரத்தினங்களைக் கொண்டு, இயல், செய்யப்பட்ட,
நெடிய - உயர்ந்த, கொடிமுடி நிகர்வன - மலைச்சிகரத்தை ஒப்பனவாகிய,
மகுடம்உம் - முடியையும்,- அறையும் - ஒலிக்கின்ற, அருவியை -
மலைநீர்ப்பெருக்கை, உவமை கொள் - (தனக்கு) உவமையாகக்கொண்ட, சவரம்உம்
- சாமரையையும்,- அடவி நிகர் என - காடு உவமை யென்னும்படி, அசைவுறு -
அசைந்தாடுகின்ற, துவசம்உம் - கொடியையும்,- முறையின் - ஒழுங்காக, நறை கமழ்
- வாசனை வீசுகின்ற, தொடைபடு - (மலையாகத்) தொடுக்கப்பெற்ற, மலர்கள்உம் -
பூக்களையும், - முடுகும் இடன் உடை - நெருங்கிய இடத்தையுடைய, முழைகள்உம்
- குகைபோன்ற மறைவிடங்களையும்,- உடையன - உடையவையாகிய, இரதம் -
தேர்கள்,- இறகர் கொடு திரிவன - (இந்திரனால் வெட்டப்படுவதற்கு முன்பு
தம்தமக்கு உள்ள) சிறகுகளாற் சஞ்சரிப்பனவாகிய, பல மலைஎன -
பலமலைகள்போல, இகலி - நெருங்கி, இசை பெற - ஒலி பெறும்படி ,
நடவின -ஓடின; (எ - று.)

     தேரின்உச்சி - மலையின் சிகரத்தையும், அதன் சவரம் - மலையருவியையும்,
அதன் துவசம் - மலையிலுள்ள வனத்தையும், தொங்க விடப்பட்டுள்ள
மாலையின்மலர்கள் - மலையிலுள்ள மலர்களையும், தேரில் மறைவாகவுள்ள
உள்ளிடங்களுட் சில - மலைக்குகைகளையும் ஒத்தலால், விரைந்தோடுகின்ற
தேர்கள்- இறகுகளைக்கொண்டு திரிகின்ற மலைகளை யொத்தன வென்க:
தற்குறிப்பேற்றவணி. சமரம் = சாமரம், பி - ம்:விசைபெற.             (21)

22.- குதிரைவருணனை.

அடலில்வலிமையில்விரைவினிலுயர்வன வகிலபுவனமு
                          நொடியினில்வருவன,
பொடியின்மிசைவெளிதுகடரவிடுவன புணரியிடையலை
                        யலையொடுபொருவன,
விடவிபடுபடைமடிதரநிமிர்வன விரியுநறுமலர்
                            கமழ்முகவுயிரன,
படியிலொருபடிநிலையறுகதியன பவனமெனநனிபர
                               வினபரிகளே.