விரைவிலே, வரவிடுவன்-வரும்படி அனுப்புவேன்;(ஆதலால்), நீ-,இன்றுஏ போய் இடம் பிடிப்பாய் - இன்றைக்கே சென்று (சுவர்க்கத்தில் இடம் அமைத்து வைப்பாயாக;(எ- று.) எதிர்கொண்டு அழைத்துப்போதல், மரியாதை. துரியோதனன் கலகம் விளைத்ததற்கும் அதனால் தருமனரசாட்சியை அழியச்செய்ததற்குந் துச்சாதனன் முக்கியமான துணைவனாயிருந்ததனால், இவன் தொழிலாகக்கூறப்பட்டன. இனி, கலகம் - திராளபதியைத்துகிலுரிதலாகக் கொண்டு, கலகத்தைச்செய்து அது காரணமாக எந்நாளும் அழியாத உங்களரசாட்சியை அழிக்கத்தொடங்கினவனே யென்றுமாம். (230) 140.-துச்சாதனன் ஊமன்போலிருக்க, அவன்தம்பிமார்கள் அம்புதொடுத்தல். வீமன்கருத்தோடிவைமொழியவேறுத்தரமற்றொன்றின்றி யூமன்றனைப்போலவனிற்கவுடனேயிளையோரொன்பதின்மர் நாமம்பெறுகோலோரொருவர்நானாலாகநடந்தவழி தூமங்கிளரவொருகணத்திற்றொடுத்தாரெதிர்வந்தடுத்தாரே. |
(இ-ள்.) வீமன்-, கருத்தோடு இவை மொழிய - (கொடிய) எண்ணத்தோடு இப்பேச்சுக்களைச்சொல்ல,-அவன் - துச்சாதனன், வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி - (அவ்வார்த்தைகளுக்கு) எதிராகியவிடை வேறொன்று மில்லாமல்,ஊமன்தனை போல் நிற்க - ஊமையானவனைப்போல (வாளா) நிற்க, உடனே-, இளையோர் ஒன்பதின்மர் - அவன் தம்பிமார் ஒன்பது பேர், நாமம் பெறுகோல்-(தங்கள்) பேரை எழுதப்பெற்ற அம்புகளை, ஒருவர் நால் நால் ஆக - ஒவ்வொருவர் நான்கு நான்கு விழுக்காடு, நடந்த வழி தூமம்கிளர-சென்றவழியிலே புகை கிளம்பும்படி (மிக உக்கிரமாக என்றபடி) ஒரு கணத்தில் - ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, தொடுத்தார் - தொடுத்துக் கொண்டு, எதிர் வந்து அடுத்தார்-எதிரில் வந்து நெருங்கினார்கள்;(எ- று.) ஊமன் - பேசுதலில்லாதவன், நாமம் பெறு கோல் - அச்சந்தருதலைப்பெற்ற அம்புமாம்; நாம் - அச்சம், உரிச்சொல்: அம்-சாரியை. (231) 141.-ஒன்பதின்மரும் வீமனம்பால் மாளுதல். தொடுத்தார்தொடுத்தகணையனைத்துஞ்சூரன்றானுந்தன்கணையாற் றடுத்தான்மீளவோரொருவர்க்கோரோர்பகழிதனுவாங்கி விடுத்தானவருமிரதமிசைவீழ்ந்தார்வீழ்ந்தவீரரைவந் தடுத்தார்விரைவிலகல்வானத்தழகார்காதலரம்பையரே. |
(இ-ள்.) தொடுத்தார் - (அவர்கள் அம்பு) தொடுத்தார்கள்; தொடுத்த-, கணை அனைத்துஉம் - அம்புகளை யெல்லாம், சூரன் தான்உம் - வீமனும், தன்கணையால் - தன் அம்புகளினால், தடுத் |