விழுந்த மேகத்தின் மழைநீர்த்துளிகள்போல(ச் சிதிறிப்போம்படி), அவற்றை கடிது உதறி - அவ்வம்புகளை விரைவாக உதறிவிட்டு,-மல் மேல் கொண்ட புயம் உற - மற்போரை மேன்மையாகக் கொண்ட தோளின்வலிமை பொருந்த, வில் வாங்கி - வில்லைவளைத்து, கொடு போர் வாளி பல - கொடிய போருக்கு உரிய பல அம்புகளை, மென்மேல் எய்தான் - மேல்மேலே தொடுத்தான்; எதிர்ப்பட்டால் - (பகைவன்) எதிரிரே வந்து அகப்பட்டால், பின்னை - பின்பு, விடும்ஓ-(வீமன்) விடுவானோ? (எ - று.)-பொதுப்பொருளும் சிறப்புப் பொருளுமாக வாரமையால், இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது. (234) 144. | தூவாநின்றவேவனைத்துந்துச்சாதனன்றன்றொடைபிழையா வேவால்விலக்கியேழுகணையெய்தானெய்தகணையேழு மாவானவற்றின்றலைநான்குமடங்கற்கொடியுமணித்தேரு மேவாநிருபன்மலர்த்தடக்கைவில்லுந்துணித்துவீழ்த்தனவே. |
(இ-ள்.) தூவாநின்ற - (வீமன்) பொழிகிற, ஏ அனைத்துஉம் - அம்புகளை யெல்லாம், துச்சாதனன்-, தன் - தனது, தொடை பிழையா - தொடுத்த இலக்குத் தவறாத, ஏவால் - அம்புகளினால், விலக்கி - தடுத்து, ஏழுகணை எய்தான் - ஏழம்புகளைத் தொடுத்தான்; எய்த கணை ஏழ்உம் -தொடுத்த அந்த ஏழம்புகளும், மேவாநிருபன் - (தம்மோடு மனம்) பொருந்தாத (பகைவனாகிய) வீமராஜனது, மாவானவற்றின் - (நான்கு) தேர்க்குதிரைகளின், தலை நான்குஉம்- தலைகள்நான்கையும், மடங்கல் கொடிஉம்-சிங்கக்கொடியையும், மணி தேர்உம் - அழகிய தேரையும், மலர் தட கை வில்உம் - தாமரை மலர் போன்ற பெரிய கையிற் பிடித்த தனுசையும், (ஆக ஏழு பொருளையும்), துணித்து - அறுத்து, வீழ்த்தன - தள்ளிவிட்டன; (எ - று.) பி-ம்: துணிய. (235) 145. | இந்தேரழியவேறொருதேரேறிப்பரவையிடைச்சுழன்ற மத்தேயனையசிலைவாங்கிமன்னற்கிளையவயமீளி யத்தேரழியக்கொடிவலவன்வயமாவனைத்துமற்றுவிழப் பத்தேயெய்தாங்கிணைவாளிபகைவன்புயத்திற்படவெய்தான். |
(இ-ள்.) மன்னற்கு இளைய வயம் மீளி - தருமராஜனுக்கு அடுத்த தம்பியாகியவலிமையையுடைய வீரனாகிய வீமன், இ தேர் அழிய - இந்தத் தேர் அழிந்ததனால்,வேறு ஒரு தேர் ஏறி-, பரவை இடை சுழன்ற மத்துஏ அனைய - பாற்கடலிற்சுழன்று கொண்டிருந்த மத்தாகிய மந்தரமலையையே போன்ற, சிலை வாங்கி,-(வேறொரு) வில்லை எடுத்து வளைத்து, அ தேர் அழிய - அத் துச்சாசனனேறியதேர் அழியவும், கொடி-கொடியும், வலவன் - சாரதியும், வயம் மா அனைத்துஉம் -வலிமையையுடைய தேர்க்குதிரைகளெல்லாமும், அற்று விழ - அறுபட்டு விழவும்,பத்துஎய்து - பத்து அம்புகளைத் தொடுத்து, ஆங்கே - அப்பொழுதே, இணைவாளி - இரண்டு அம்புகளை, பகைவன் புயத்தில் பட - பகைவனான அவனதுதோளிரண்டிலும் படும்படி, எய்தான்-; (எ - று.) மந்தரம் பாற்கடலைக்கலக்கியதுபோல வில் போர்க்கடலைக் கலக்குத |