வேறு. 157.-அப்போது துரியோதனன்சேனை வென்னிடல். மன்னற் கிளையோனை வாட்டரும னுக்கிளையோன் றுன்னிப் பிளந்து சுரருலக மேற்றுதலுங் கன்னற்கு மற்றுள்ள காவலர்க்கு நில்லாமல். வென்னிட்ட தம்மன்னன் வீரப் பெருஞ்சேனை. |
(இ-ள்.) மன்னற்கு இளையோனை - துரியோதனன் தம்பியை, வாள் தருமனுக்கு இளையோன் - ஒளியையுடைய தருமனது தம்பி, துன்னி - நெருங்கி, பிளந்து-, சுரர் உலகம் ஏற்றுதலும்-தேவலோகத்தை யடையச் செய்தவளவில்,-அ மன்னன்-அத் துரியோதனனது, வீரம் பெருசேனை - வீரத்தன்மையையுடைய பெரியசேனையானது, கன்னற்குஉம் - (சேனாபதியான) கர்ணனுக்கும். மற்று உள்ள காவலர்க்குஉம் - மற்றுமுள்ள அரசர்களுக்கும், நில்லாமல்-(தடுக்கவுந்) தடைப்பட்டுநிற்காமல், வென்இட்டது-முதுகுகொடுத்து ஓடிற்று; (எ - று,) இதுமுதல் இருபத்தொருகவிகள் - பெரும்பாலும் வெண்டளையால் வந்த நாற்சீர் நான்கடிக்கொச்சகக்கலிப்பாக்கள். (248) 158.- வீமன் துச்சாதனனைக் கொன்றது கண்டு க்ருஷ்ணார்ச்சுனர் முதலோர் உடன்கூடுதல் வண்டாரவாரமறாதநறும்பூந்துளபத் தண்டார்முடியோனும்விற்கைத்தனஞ்சயனுங் கண்டாரவர்முதலாங்காவலருங்கைகலந்தார் வெண்டாரகைபரந்தவிண்ணொத்ததாகவமே. |
(இ-ள்.) வண்டு் ஆரவாரம் அறாத - வண்டுகளின் பேரொலி நீங்காத, நறு -வாசனை வீசுகிற, பூ - அழகிய, தண் - குளிர்ந்த, துளபம் - திருத்துழாயினாலாகிய,தார் - மாலையையுடைய, முடியோன்உம் - முடியையுடைய கண்ணணும், வில் கைதனஞ்சயன்உம் - வில்லைப்பிடித்த கையையுடைய அருச்சுனனும், அவர் முதல் ஆம் காவலர்உம் - அவர்முதலிய அரசர்களும், கண்டார் - (வீமன் துச்சாதனனைக்கொன்றதைப்)பார்த்து, கைகலந்தார் - உடன் கூடினாராக, ஆகவம் -(பாண்டவசேனை நின்ற) போர்க்களம், வெண் தாரகைபரந்த விண் - வெண்மையானநட்சத்திரங்கள் பரவிய ஆகாயத்தை, ஒத்தது-; (எ- று.) கைகலந்தார் என்பது முற்றெச்சமாய், கைகலக்க வென்னும் பொருள் தந்து நின்றது; இதனை முற்றாகவேகொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது பின்னவாக்கியமாகும். (249) 159.-வீமன் திரௌபதி கூந்தலைப்பற்றியவை இவையென்று மீண்டுந் துச்சாதனன் கைவிரல்பத்தையுந் துணித்தல். வேகமிகுஞ்செந்தீயின்மேனாளவதரித்த தோகைகுழலுந்துகிலிமுடன்றொட்டனவென் |
|