பக்கம் எண் :

132பாரதம்கன்ன பருவம்

றாகமுறப்பிளந்தவாண்டகைமீண்டவ்வீரன்
பாகமுறுகைவிரல்கள்பத்துந்துணித்தானே,

    (இ-ள்) ஆகம் உற பிளந்த - துச்சாசனனுடம்பை நன்றாகக்கீண்ட,
ஆண்தகை -ஆண்மைக்குணமுள்ள வீமன், அ  வீரன் - வீரனாகிய
அத்துச்சாசனனது, பாகம்உறு கை விரல்கள் பத்துஉம் - கூறாகப்பொருந்திய
கைகளின் பத்துவிரல்களையும்,'(இவை), வேகம் மிகும் செம் தீயில் உக்கிரத்தன்மை
மிகுந்த செம்மையாகியநெருப்பில், மேல் நாள் அவதரித்த - முன்னே பிறந்த,
தோகை மயில் போலுஞ்சாயலையுடைய திரௌபதியின், குழல்உம் - கூந்தலையும்
துகில்உம் -சேலையையும், உடன் தொட்டன - ஒருங்கேதொட்ட
குற்றமுடையவையாம்,' என்று- என்றுஎண்ணி, மீண்டு - மறுபடியும், துணித்தான் -
தனித்தனி அறுத்தான்;(எ-று.)                                    (250)

160.-துச்சாதனனிரத்தத்தை வீமன் குடிக்கப்புகக்
கிருஷ்ணன் தடுத்தல்.

தண்ணீர்நிகரெனத்துச்சாதனன்றன்மெய்யிலிழி
புண்ணீர்பருகப்புகுவோனையாவருக்குங்
கண்ணீர்வரத்தடுத்தான்காணுங்காலெத்திறத்தும்
வெண்ணீர்மையில்லாதமேகந்தனைப்போல்வான்.

     (இ-ள்.) காணுங்கால்-பார்க்குமிடத்தில், எ திறத்துஉம் - எல்லாவகையாலும்,
வெண் நீர்மை இல்லாத மேகந்தனை போல்வான்- வெண்ணிறமில்லாத (மிகக்கரிங்)
மேகத்தை ஒப்பவனாகிய கண்ணபிரான், துச்சாதனன்தன் மெய்யில் இழி புண்நீர் -
துச்சாதனனுடம்பிலிருந்து வழிகிற இரத்தத்தை, தண் நீர் நிகர் என-குளிர்ந்த நீரை
ஒக்கு மென்னும்படி, பருக புகுவோனை - குடிக்கத் தொடங்குகிற வீமனை,
யாவருக்குஉம் கண் நீர் வர - எல்லோர்க்கும் (இரக்கத்தால் கண்களில்)
நீர்வருவதைநோக்கி, தடுத்தான் - (குடிக்கவேண்டாமென்று) தடைசெய்தான்;(எ- று.)

     கருநிறத்தாலும் கைம்மாறு கருதாது கருணைமழைபொழிதலாலும்
காத்தற்றொழிலாலும் குளிர்ச்சியினாலும்ஒத்திருத்தலால், 'எத்திறத்தும் மேகந்தனைப்
போல்வான்' என்றார்.                                           (251)

161.-துச்சாதனன்குருதியைக் கொப்பளித்து என் எண்ணம்
முற்றியதென்று வீமன் கூத்தாடுதல்.

குடியாமலக்குருதிகொப்பளித்துவாகை
முடியாநின்றென்னெண்ணமுற்றினனென்றாங்கட்
படியாளுஞ்செங்கோன்மைப்பார்த்திவருக்கெல்லாங்
கொடியார்மடங்கலெனக்கூத்தாடிநின்றார்த்தான்.

     (இ-ள்.) (வீமன்), -குடியாமல் அ குருதி கொப்பளித்து- (வாயிற்கொண்ட)
அவ்விரத்தத்தை(க் கண்ணன் வார்த்தையினாற்) பருகாமல் உமிழ்ந்துவிட்டு, வாகை
முடியாநின்று - வெற்றிமாலையைச்  சூட்டிக்கொண்டு நின்று ஆங்கண் -
அவ்விடத்திலுள்ள,