164.-வாளாவிருத்தற்குக் கர்ணனையிடித்துக்கூறிச் சல்லியன் தேரைச் செலுத்தலுறல். மேல்கொண்டுபாண்டவர்தம்வெஞ்சேனைசூழ்ந்திடவு மால்கொண்டவர்போலமாண்டாயோயெனக்கழறிக் கால்கொண்டதிண்டேர்கடாவினான்கையளவு கோல்கொண்டான்கன்னனுமக்கூற்றுக்கெதிர்கூறும். |
(இ-ள்.) கை உளவுகோல் கொண்டான் - கையிற் குதிரை யோட்டுங் கோலைக்கொண்ட சாரதியாகிய சல்லியன்,-(கன்னனை நோக்கி), 'வெம் - கொடிய, பாண்டவர்தம் சேனை-, மேல்கொண்டு - மேலேவந்து, சூழ்ந்திடஉம் - சுற்றிக்கொள்ளவும், (எதிர்சொல்லாமல்), மால் கொண்டவர் போல - மயக்கங்கொண்டவர்கள்போல, மாண்டாய்-(வலி) அழிந்தாய்,' என கழறி என்று இடித்துச்சொல்லி,-கால் கொண்ட திண்தேர் - சக்கரங்களைக்கொண்ட வலிய தேரை,கடாவினான் - செலுத்தினான்; கன்னனும்-, அ கூற்றுக்கு எதிர் கூறும் - அச்சல்லியனது வார்த்தைக்கு உத்தரஞ்சொல்லுவானாயினான்; (எ -று,) - அது மேற்கவியிற் கூறுகின்றார். கூற்று - கூறப்படுவது; சொல், மாண்டாய், மாள் - பகுதி. (255) 165.-கர்ணன் 'துச்சாதனனிறந்த சோகத்தாலிருந்த நிலை இது' என்று சமாதனாங் கூறுதல். வேந்தனனையவிறற்றம்பிவீமன்கை மாய்ந்தநிலைகண்டுமனந்தளர்ந்ததல்லாது கூர்ந்ததிறன்மத்திரத்தார்கோவேவொருவுமோ பாந்தளெதிர்செல்லப்பறவைக்கரசென்றான். |
(இ-ள்.) 'கூர்ந்த திறல் - மிகுந்தவலிமையையுடைய, மத்திரத்தார் கோவே - மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனே! வேந்தன் அனைய - துரியோதனனைப்போன்ற, விறல்தம்பி - வலிமையையுடைய அவன் தம்பியாகிய துச்சாதனன், வீமன் கை - வீமனதுகையினால், மாய்ந்த நிலை - இறந்தநிலையை, கண்டு - பார்த்து, மனம்தளர்ந்தது அல்லாது - (யான்) மனத்தளர்ச்சிபெற்றதே யல்லாமல், பறவைக்கு அரசு - பக்ஷிராஜனானகருடன், பாந்தள் எதிர் செல்ல - பாம்புக்கு எதிரேபோவதற்கு, வெருவும்ஓ - அஞ்சுமோ?' என்றான் - என்று சொன்னான்; (எ- று.) யான் பகைவர் முன்னே செல்லுதற்குச் சிறிதும் அஞ்சமாட்டேனென்பது தோன்ற நின்றமையால், பின்னிரண்டடி பிறிதுமொழிதல் என்னும் அணி. (256) 166.-கர்ணன் முதுகிட்டோரையும் துரியோதனனையும் பேரணியாக்கிப் பகைவரை எதிர்த்தல். முன்னமமரின்முதுகிட்டமன்னரையு மன்னவர்கண்மன்னனையும்வன்பேரணியாக்கிப் |
|