பக்கம் எண் :

138பாரதம்கன்ன பருவம்

174.-விடசேனனது ஆண்மைகண்டு
அருச்சுனன் அவனைக் கொல்லுமாறு செல்லுதல்.

நன்றூண்டிகழ்மதியாநாகம்பருமத்தா
வன்றூண்டிரைமதியாவண்டர்க்கமுதளித்தோன்
முன்றூண்டியதேரிற்சென்றான்முனைவாளி
மின்றூண்டில்வீசிவிடசேனமீன்படுப்பான்.

     (இ-ள்.) திகழ் மதி - விளங்குகிற சந்திரன், நல் தூண் ஆ -
நல்லதூணாகவும்,நாகம் - (மந்திர மென்னும்) மலை, பருமத்துஆ -   பருத்த
மத்தாகவும், திரை -அலைகளையுடைய பாற்கடலை, மதியா - கடைந்து, அன்று -
அந்நாளில்,அண்டர்க்கு-தேவர்களுக்கு, அமுது - அமிர்தத்தை, ஊண் - உணவாக,
அளித்தோன் - கொடுத்தருளின கண்ணன், முன் தூண்டிய - முன்னே நின்று
செலுத்தப்பெற்ற, தேரில் - தேரிலே, (அருச்சுனனாகிய வலைஞன்), முனை வாளி -
கூர்மையையுடைய அம்பாகிய, மின் தூண்டில் - விளங்குகிற தூண்டிலை, வீசி -
எறிந்து, விடசேனன் மீன் - விடசேனனாகிய மீனை, படுப்பான் - அகப்படுத்திக்
கொல்லும்பொருட்டு, சென்றான்-;(எ- று.)

     "மத்து மந்தரம் வாசுகி கடைகயி றடைதூண், மெத்து சந்திரன்" என்றார்,
கம்பரும். தூண்டில் - மீன்பிடிக்குங் கருவியிலொன்று. விடசேனமீன் -
உயர்திணையீறு விகாரமாயிற்று. அம்பைத் தூண்டிலாகவும் விடசேனனை மீனாகவும்
உருவகப்படுத்தினதற்கு ஏற்ப, அருச்சுனனை 'வலைஞன்' என்னாமையால்,
ஏகதேசவுருவகவணி. ஊண் திரை யென்றேஎடுத்து - உணவுக்குரியபாற்கடற்றிரை
யெனினுமாம். மீனைக்கூறியது துள்ளுந்தன்மைக்கேற்ப.                  (265)

175.-விடசேனன் கடுமையாகப் பொருதல்.

தம்பிபடுந்துன்பந்தமையனையுங்காண்பனென
வெம்பியெதிர்சென்றுவிடசேனன்வில்வாங்கிப்
பம்பிவருகொடித்தேர்ப்பார்த்தனையும்பாகனையு
மம்பின்மறைத்தானடலேரியனையான்.

     (இ-ள்.) அடல் - வலிமையையுடைய, அரி ஏறு - ஆண்சிங்கத்தை,
அனையான் - ஒத்தவனாகிய, விடசேனன்-, 'தம்பி படும் துன்பம் - தம்பியாகிய
நகுலன் அடைந்த துன்பத்தை, தமையனைஉம் காண்பன் - தமையனாகிய
அருச்சுனனையும் அடையும்படி செய்வேன்,' என - என்றுஎண்ணி, வெம்பி -
கோபித்து, எதிர் சென்று - எதிரே போய், வில் வாங்கி - வில்லை வளைத்து,-
பம்பிவரு-நெருங்கி வருகிற, கொடி தேர் - அனுமக்கொடியைக்கொண்ட
தேரையுடைய,பார்த்தனைஉம் - அருச்சுனனையும், பாகனைஉம் - அவன்
சாரதியானகண்ணனையும் அம்பின் - அம்புகளினால், மறைத்தான்-;

     கீழ் நகுலனை மூர்ச்சித்து விழும்படி செய்ததுபோலவே இப்போது
அருச்சுனனையும் விழச்செய்வேன் என்பது முதலடிக்குக்