குலம் என - நீர்ப்பாம்புகூட்டம்போலிருப்பவும்,- நெரிய வருவன - நெருங்கிவருவனவாகிய, வகை படு - பலவகைப்பட்ட, மிடல் - வலிமையையுடைய, அணி - வரிசைகள், நிமிர எழுவன - உயர்ந்து எழுவனவாகிய, நிரை கெழு திரை என - ஒழுங்குபொருந்திய அலைகள்போலிருப்பவும்,- விருதர் - காலாள்வீரர்கள்,- விரிவின் - பரப்பிலே, அளவு அறு -ஓரளவில்லாத, சலநிதி - கடல், நிகர் என - உவமை யென்னும்படி, வெகுளி மிகுகதி கடுகினர் - கோபம்மிக்கநடையுடனே விரைந்துசென்றனர்; (எ-று.) பவனசம் பவநாஸம் என்பதன் விகாரம்; காற்றை யுண்பது என்று பொருள். (23) 24.- வாத்தியகோஷ வருணனை. முரசுகரடிகைகிணைதுடிபெருமர முருடுபடுபறைமுதலியகருவிக, ளரசவரிவளைகொடுவயிரெழுகுழலரவவிருதுகண்முதலியகருவிக, ளுரைசெய்கருவிகண்முழுவதுமெழுவகையுலகமுடிவுறவுக விறுதியிலெழு, கரைசெய்கடலெனவெறிவளியெனமிசை கஞசலியுருமெறிகன மெனவதிரவே. |
இதுமுதல் மூன்றுகவிகள் குளகம். (இ-ள்.) முரசு - பேரிகையும், கரடிகை-, கிணை-, துடி-, பெருமரம்-, முருடு-, படு - (என்று) சொல்லப்படுகின்ற, பறை - பறைகளும், முதலிய முதலான, கருவிகள்- அடிக்கப்படுகின்ற வாத்தியங்களும்,-அரச(ர்) வரி வளை - அரசர்கட்குஉரியகோடுகளமைந்த சங்குகளும், கொடு வயிர்- வளைந்த ஊதுகொம்புகளும், எழுகுழல் - ஒலியெழுகின்ற வேய்ங்குழல்களும், அரவம் விருதுகள் - ஓசையையுடையவெற்றிக்கு அடையாளமான சின்னங்களும், முதலிய - முதலான, கருவிகள் -வாத்தியங்களும்,- முழுவதும்உம் - ஆகிய இவையெல்லாம்,- ஏழு வகை உலகம்முடிவுற - ஏழுவகை யுலகங்களும் அழியும்படி, உகம் இறுதியில் - யுகாந்த[பிரளய] காலத்தில், எழு - மேற்பொங்கிவருகின்ற , கரை செய் - ஒலித்தலைச்செய்கிற, கடல் என - கடல்போலவும், ஏறி வளி என - வீசுகின்றபெருங்காற்றுப்போலவும், மிவை கஞலி உரும் எறி கனம் என - ஆகாயத்தின் மேற்பரந்து இடி யிடிக்கின்ற மேகம்போலவும், அதிர - ஒலிக்க,- (எ -று.) - இக்கவியில்'அதிர' என்ற செயவெனெச்சமும், மேற்கவியில் 'நடவ' என்ற செயவெனெச்சமும்,அதன் மேற்கவியிலுள்ள 'பருகின' என்னும் முற்றைக் கொண்டு முடியும். கரடிகை முதலியன - பறைகளின் பேதங்கள். பெருமரம் - பெரிய மரத்தினாலாகிய தெனக் காரணப்பெயர். (24) 25.- இருதிறத்துச்சேனையும் ஒன்றோடொன்று எதிர்த்தல். எறியுமுரசமெரிவிழியுரகமுமெழுதுகொடியுடையவரிரு படையினும், வெறிகொண்மதமலைகளுமதமலைகளும் விசயமிகுவன விரதமு மிரதமு, நெறிகொணவகதியிவுளியுமிவுளியுநிருதாகுலநிகர்விருதரும் |
|