லுள்ள அண்டங்களெல்லாமும், நெரியும் - அதிர்ந்து நொருங்கும், என்று - என்றுஎண்ணி, அயன் - (படைத்தற்கடவுளான) பிரமன், அஞ்சினன் - பயந்தான்: சேனையின் நெருக்கினால் - சேனைகளின் நெருக்கத்தாலுண்டான பாரத்தால், எனைத்துஉள்ளகிரிகள்உம்-உள்ள மலைகளெல்லாம், சரிந்திடும் - சாய்ந்துவிடும், என- என்று எண்ணி, கிரிசன்உம் - (கைலாச) மலையில்வாசஞ்செய்கிறசிவனும், அஞ்சினான்-; கிளர் ஆழி - விளங்குகிற கடலிற்பள்ளிகொள்கிற, அரிஉம் - விஷ்ணுவும், தூளியால் - புழுதியினால், அலைகடல் அடைய - அலைகின்ற கடல்களெல்லாம், வற்றிடும் - வற்றிப் போம், என்று- என்று எண்ணி, அஞ்சினன்-; (எ - று.) பேரியங்கள், அம் - சாரியை; இனி, பேர் இயங்கள் எனப்பிரித்து - பெரிய வாச்சியங்க ளென்றுமாம். வெளியண்டங்கள் நெரியுமெனவே, இவ்வண்டம்நெரிதல் சொல்லாமலேபெறப்படும். (277) 187.-நான்குகவிகள் - இருதிறத்துச் சேனையும் நெருங்குதலைக் கூறும் பரியுடன்பரிநெருங்கினநெருங்கினபடையுடன்படைமத்தக் கரியுடன்கரிநெருங்கினநெருங்கினகடவுதேருடன்றேரும் விரிநெடுங்குடைகுடையொடுநெருங்கின விலோதமும்விலோதத்(தோ டரியெறிந்திடநெருங்கினவாடையுமாடையுமலமந்தே. |
(இ-ள்.) பரியுடன் - குதிரைகளோடு, பரி நெருங்கின-;படையுடன் - காலாட்சேனையோடு, படை நெருங்கின-; மத்தம்கரியுடன் - மதம்பிடித்தயானைகளோடு, கரி நெருங்கின-; கடவு தேருடன் - செலுத்தப்படுகிற தேர்களோடு, தேரும் நெருங்கின-; விரி நெடு குடை - பரந்த நீண்ட குடைகள், குடையோடு நெருங்கின; அரி எறிந்திட - காற்று வீசுதலினால், ஆடைஉம் ஆடைஉம் அலமந்து - சீலைகளுஞ் சீலைகளும் அசையப்பெற்று, விலோதம்உம் - துவசங்களும், விலோதத்தோடு - துவசங்களோடு, நெருங்கின-; (278) 188. | பரியில்வீரரும்பரியில்வீரரும்வயப்படையெறிந்தனர்கொற்றக் கரியில்வீரருங்கரியில்வீரருமமர்கடுகினர்காற்றேராங் கிரியில்வீரருங்கிரியில்வீரருமெதிர்கிடைத்தனர்பதசாரித் தெரியல்வீரருந்தெரியல்வீரருமுடன்செருப்புரிந்தனரன்றே. |
(இ-ள்.) அன்று - அப்பொழுது, பரியில் வீரர்உம் - குதிரைகளின்மேல் ஏறியவீரர்களும், பரியில் வீரரும்,-, (ஒருவர்மேலொருவர்), வயம் படை எறிந்தனர் -வெற்றியைத்தருகிற ஆயுதங்களை எறிந்தார்கள் - கொற்றம் - வெற்றியையுடைய,கரியில் வீரர்உம் - யானைகளின்மேல் ஏறிய வீரர்களும், கரியில் வீரரும்-,அமர்கடுகினர் - போரில் விரைந்தார்கள்; கால்தேர் ஆம் - சக்கரங்களையுடையதேர்களாகிய, கிரியில்-மலைகளின்மேலேறிய, வீரரும்-, கிரியில்வீரரும்-, எதிர்கிடைத்தனர் - எதிரேகிட்டினார்கள், பதசாரி - கால்களால் நடக்கிற, தெரியல் -போர்மாலையையுடைய, வீரரும்-, தெரியல்வீரரும்-,உடன்- ஒருவரோடொருவர்,செருபுரிந்தனர் - போர் செய்தார்கள்;(எ -று.)-அன்றே ஈற்றசையாகவுமாம். பி-ம்:பலசெருப்.
|