189. | எடுத்தவேல்களும்வேல்களுமுனைந்தனவிலக்குறக்கொடும் பாணந், தொடுத்தசாபமும்சாபமும்வளைந்தனதொடியுடைக்கரசாலத், தடுத்தவாளமும்வாளமும்பொருதனவங்குலிகளிற்சுற்றி, விடுத்தநேமியுநேமியுந்துணித்தனவீரர்சென்னிகள்வீழ. |
(இ-ள்.) எடுத்த - (கையில்) எடுத்த, வேல்களும் வேல்களும்-, முனைந்தன - போர்செய்தன; இலக்கு உற - லட்சியத்திலே பொருந்தும்படி, கொடு பாணம் - கொடிய அம்புகளை, தொடுத்த-, சாபம்உம்-விற்களும்-, சாபமும்-, வளைந்தன-, தொடி உடை - தொடியென்னும் ஆபரணத்தையுடைய, கரசாலத்து - கைகளின் கூட்டத்தில், அடுத்த - பொருந்திய, வாளம்உம் - வாள்களும், வாளமும்-, பொருதன- போர்செய்தன; அங்குலிகளின் - விரல்களினால், சுற்றிவிடுத்த - கழற்றிவிட்ட,நேமிஉம் - சக்கரங்களும், நேமியும்-, வீரர்சென்னிகள் வீழ-வீரர்களது தலைகள்விழும்படி, துணித்தன - அறுத்தன; (எ - று.) இலக்கு - குறிப்பிட்ட பொருள். பி-ம்:கரசாலம். (280) 190.- | அறன்மகன்பெருஞ் சேனையி னிருபரு மரவவெங் கொடியாடை, மறன்ம கன்கொடுஞ் சேனையி னிருபரும் வஞ்சினம் பலகூறித். திறன்மி குந்ததஞ் சேனையொ டெதிரெதிர் சென்றுசென் றிடந்தோறு, முறமலைந்தன ரொருவருக் கொருவர்தோ ளுரமும்வீ ரமுமொத்தோர். |
(இ-ள்.) ஒருவருக்கொருவர் ஒருவர் - ஒருத்தரோடொருத்தர், தோள் உரம்உம் -புஜபலத்திலும், வீரம்உம் - பராக்கிரமத்திலும், ஒத்தோர் - ஒத்தவர்களாகிய, அறன்மகன் பெரு சேனையில் நிருபர்உம் - தருமபுத்திரனது பெரியசேனையிள்ளஅரசர்களும், வெம் அரவம்கொடிய பாம்பை யெழுதிய, கொடி ஆடை -கொடிச்சீலையையுடைய, மறன்மகன் - அதருமத்தையுடைய துரியோதனனது,கொடுசேனையில்- கொடிய சேனையிலுள்ள, நிருபர்உம் - அரசர்களும், வஞ்சினம்பல கூறி பல சபதங்களைச் சொல்லிக்கொண்டு, திறல் மிகுந்த தம் சேனையொடு -வலிமை மிகுந்த தமது சேனையுடனே, எதிர் எதிர் சென்று சென்று - எதிரே எதிரே போய்ப் போய், இடம் தோறுஉம் - இடங்கள்தோறும், உற மலைந்தனர் -நன்றாகப் போர்செய்தார்கள்;(எ - று.)-மறன் மகன் - அதருமமுடையதிருதராட்டிரனது மகனுமாம். (281) வேறு. 191.-அருச்சுனன் தம்பிமார்முதலானாரோடு வருதல். இளைஞ ரும்பெருஞ் சேனையு மிருபுடை நடக்கக் கிளைஞர் யாவரு நேமியங் கிரியெனச் சூழ விளையும் வெஞ்சின வீமன்முன் போதர விசயன் வளைநெ டுஞ்சிலை கணைமழை பொழிந்திட வந்தான். |
(இ-ள்.) விசயன் - அருச்சுனன்,-இளைஞர்உம் - தம்பிமரான நகுல சகதேவரும், சேனைஉம் - பெரிய சேனைகளும், இருபுடை |