201. | பரிதியன்பொடுவழங்கியபராபரமெனும் பெருவலம்புரிகுறித்துவிறலங்கர்பெருமான் வரிநெடுஞ்சிலைவலாரிதிருமைந்தன்விடுதிண் சரமடங்கவவர்தந்தசரமெய்துதறியா. |
(இ-ள்.) விறல் அங்கர் பெருமான் - வலிமையையுடைய அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணன், அன்பொடு-, பரிதி - சூரியன், வழங்கிய-(தனக்கு) கொடுத்தருளின பராபரம் எனும்-பரார்பரமென்னும் பெயரையுடைய, பெருவலம் புரி- பெரியவலம்புரிச்சங்கத்தை, குறித்து - ஊதி, வரி நெடு சிலை - கட்டமைந்த பெரியவில்லையுடைய, வலாரி திரு மைந்தன் - இந்திரனது சிறந்த மகனான அருச்சுனன்,விடு - (தன்மேல்) விடுகிற, திண் - வலிய சரம் அடங்க - அம்புகளை யெல்லாம்,அவர் தந்த சரம் எய்து - அச்சூரியன் கொடுத்த அம்புகளைப் பிரயோகித்து, தறியா- துணித்து,- (எ- று,) "கதிர்க்கணைவிதங்கள் கொடு***தேர் இயக்கமற்றிட ஒர்கூடமியற்றினன்" என மேற்கவியில் முடியும். வலசாரி - பலாரி; பல அரி: பலன் என்னும் அசுரனை அழித்தவன் -பி-ம்: அமர்தந்த. (292) 202.-கர்ணன் பலவகைகளாற் சரகூடமுண்டாக்க, கிருஷ்ணனும் தன் மாயையால் சரகூட முண்டாக்கல். வயக்க திர்க்கணைவி தங்கள்கொடு மாயன் விடுதே ரியக்க மற்றிடவி யற்றினனொர் கூட மிவனுந் தியக்க முற்றிடம யக்கிநெடு மால்செய்விரகா லுயக்க மிக்கசர கூடமுள தாய தவணும். |
(இ-ள்.) இவன்உம் - கர்ணனும், வய - வலிமையையுடைய, கதிர் - ஒளியையுடைய, கணை விதங்கள் கொடு - அம்புகளின் வகைகளால், மாயன் விடு தேர் - கண்ணன் செலுத்துகிற (அருச்சுனன்) தேர், இயக்கம் அற்றிட - செல்லுதல் இல்லையாம்படி, ஒர் கூடம் - ஒருமறைவை. இயற்றினன் - உண்டாக்கினான்; நெடு மால் - (திரிவிக்கிரமனாய்) நீண்ட கண்ணன், தியக்கம் உற்றிட - கலக்கமுண்டாம் படி,மயக்கி - மயங்கப்பண்ணி, செய் - செய்த விரகால் - மாயையினால், உயக்கம் மிக்க- வருத்தம் மிகுந்த, சர கூடம் - அம்புக்கூடு, அவண்உம் - அவ்விடத்திலும் (கர்ணன்பக்கத்திலும்), உளது ஆயது-உண்டாயிற்று; (எ - று.) - சரகூடம் - அம்புகளால் தொடுக்கும் பின்னற்செறிவு. (293) வேறு. 203. - சரகூடத்தினுட்பட்ட கர்ணன் செயலற்று நிற்க, அருச்சுனனும் அங்ஙன் நிற்கவே, கிருஷ்ணன் வினாதல். மாயா சரகூ டமறைத் திடலால் வலையுட் படுவீ ரமடங் கலெனச், சாயாபதிமைந் தனுநின் றனன்மெய் தளர்வுற் றனனின் றதனஞ்சயனு, மேயாவிதுவென் கொன்முனைந் துபொரா தெழுதோ வியமாயினையென் றுவிறற், காயா மலர்வண் ணன்விளம் புதலுங் கவிவெங்கொடியோ னிருகை குவியா. |
|