பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்151

இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்

     (இ-ள்.) மாயா சரகூடம் - (கிருஷ்ணன்) மாயையாலாகிய அம்புக்கூடு.
மறைத்திடலால் - (முழுவதும்) மறைத்துவிட்டதனால், சாயா பதி மைந்தன்உம் -
சாயாதேவியின் கணவனான சூரியனது குமாரனாகிய கர்ணனும், வலை உள்படு -
வலையினுள்ளே அகப்பட்டுக்கொண்ட, வீரம் மடங்கல்என-வீரத்தன்மையையுடைய
சிங்கம் போல, நின்றனன் - (ஒன்றுஞ் செய்யமாட்டாமல்வாளா) நின்றான்;
நின்றதனஞ்சயன்உம் - (எதிரில்) நின்ற அருச்சுனனும், மெய் தளர்வுற்றனன் -
(ஒன்றுஞ்செய்யாது) உடம்புதளர்ச்சியடைந்தான்; (அது நோக்கி), விறல் -
வெற்றியையுடைய, காயா மலர் வண்ணன்-காயாம் பூப்போன்ற (கரிய திருமேனி)
நிறத்தையுடைய கண்ணன், (அருச்சுனனை நோக்கி), ' ஏயா - தகாத,  இது -
இவ்வாறுநிற்பது, என்கொல் - என்ன? முனைந்து பொராது - விரைந்து
போர்செய்யாமல், எழுது ஓவியம் ஆயினை - எழுதுசித்திரம்போல (அசைவற்று)
நின்றுவிட்டாய்,' என்று-, விளம்புதலும் - சொன்னவளவில்,- வெம் கவி
கொடியோன்- (பகைவர்க்குப்) பயங்கரமான அனுமத்துவசத்தையுடைய அருச்சுனன்,
இருகைகுவியா - இரண்டுகைகளையுங் கூப்பி (அஞ்சலிசெய்துகொண்டு),-(எ - று.)-
அடுத்தகவியில் "என்றலுமே" என்பதனோடு தொடரும். சாயை - சூரியன்
மனைவிகளுள் ஒருத்தி, கபி - கவி எனத் திரிந்தது.

     இதுமுதற் பதினெட்டுக்கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய  எண்சீராசிரியவிருத்தங்கள்.                         (294)

204.-கர்ணன் தருமபுத்திரன்போல் தோன்றுவதனால் இனி
என்னாற் பொர முடியாதென்று அருச்சுனன் சொல்ல,
க்ருஷ்ணன் தேரைத் திருப்பிவிடுதல்.

வன்போர்புரிவெங்கணையங்கர்பிரான்மறனாலுயர்பேரறனார்குமரன்
றன்போலவிளங்கினனாதலினென்றனுவுங்குனியாதுசரங்கள்செலா
வன்போடியதுள்ளமெனக்கினிமேலவனோடமர்செய்தலுமிங்கரிதால்
வென்போகுவனென்றலுமேயிறைவன்விசையோடிரதத்தினைமீளவிடா.

     (இ-ள்.) 'வல் போர் புரி - வலிய போரைச் செய்கிற, வெம் கணை -
கொடியஅம்புகளையுடைய, அங்கர் பிரான் - அங்கநாட்டார்க்கு அரசனான
கர்ணன்,மறனால் உயர் - வலிமையினாற்சிறந்தபேர் - பெரிய, அறனார் குமரன்
தன் போல -தருமபுத்திரன்போல, விளங்கினன் - (எனக்குக்) காணப்பட்டான்;
ஆதலின் -ஆதலால், என் தனுஉம் - எனது வில்லும், குனியாது - வளையாது;
சரங்கள் - அம்புகளும், செலா - (அவன்மேற்) செல்லா, உள்ளம் - மனம், அன்பு
ஓடியது -(அவன்மேல்) அன்புசெல்லப்பெற்றது; எனக்கு-, இனி மேல்-, இங்கு -
இவ்விடத்தில்,அவனோடு-, அமர்செய்தல்உம்- போர்செய்தலும், அரிது -
அருமையானது; ஆல் -ஆதலால், வென்போகுவன் - முதுகுகாட்டிப்போவேன்',
என்றலுமே - என்றுசொன்ன மாத்திரத்தில்-, இறைவன் - கண்ணன், விசையோடு -
வேகத்தோடு,இரதத்தினை - தேவர், மீளவிடா - திரும்ப விட்டு,-(எ - று)-,