"முரசக்கொடி மன்னவன் முன்புசெல" என அடுத்த கவியில் தொடரும். அறன் - அறம் என்னும் பகுதியின்மேல் அன்விகுதிபெற்று வந்த ஆண்பாற்பெயர்; 'ஆர்' விகுதி உயர்வுகுறிக்கவந்தது, அன்பாவது - மனைவியும் புத்திரரும் முதலிய உறவினரிடத்துக் காதலுடையவனாதல். இறைவன் - (எல்லாப்பொருள்களிலும் அந்தர் யாமியாய்த்) தங்குகின்றவன்; இறுத்தல் - தங்குதல். (295) 205. - அப்போது, இன்னும் கர்ணனைக் கொல்லாமைக்காக அருச்சுனன்வில்லைத் தருமன் பழித்துரைத்தல். முகில்வண்ணணும்வாசவன்மாமகனு முரசக்கொடிமன்னவன் முன்புசெலப், பகலின்பதிமைந்தனையின்னமுமிப் பகல்சாய்வதன்முன்பு படுத்திலையா, லிகவெங்ஙன்முடித்திடுநின்கையில்வில்லிது வென்னவி லென்றுதிருத்தமையன், புகலுஞ்சொலவன்செவியிற்புகவே புண்மே லயிலுற்றதுபோன்றதுவே. |
(இ-ள்.) முகில் வண்ணன்உம் - மேகம்போன்ற நிறத்தையுடைய கண்ணனும், வாசவன் மா மகன்உம் - சிறந்த இந்திரகுமாரனான அருச்சுனனும், முரசம் கொடி மன்னவன் முன்பு - முரசையெழுதிய கொடியையுடைய தருமனுக்கெதிரில், செல - போக,- திருதமையன் - (அருச்சுனனது) மேலான தமையனான அத்தருமன், 'இன்னமும்-, இ பகல் சாய்வதன் முன்பு - இந்தப் பகற்பொழுது கழிதற்குமுன்னே, பகலின் பதி மைந்தனை - பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான கர்ணனை, படுத்திலை - கொன்றாயில்லை; நின் கையில் வில் - எனது கையிற் பிடித்தவில், இகல் - பகையை, எங்ஙன் - எவ்வாறு முடித்திடும் - அழித்துவிடும்? இதுஎன்னவில்-?' என்று-, புகலும் - (அலட்சியமாகச்) சொன்ன, சொல் - வார்த்தை, அவன் செவியில் புகா - அருச்சுனனது காதில் நுழையவே, புண்மேல் அயில் உற்றது போன்றது-புண்ணில் வேல் நுழைந்தது போன்றது, (எ-று.)-மிகவருத்தம் உண்டாக்கிற்று என்றபடி-புண் - கர்ணனைத் தருமனாகக் கண்டதானலுண்டான தளர்ச்சிக்கும், அதன்மேல் வேல் பொருந்துதல் - தருமன் வார்த்தை செவியுற்றதற்கும் உவமை யென அறிக. (296) 206.- தன்சபதப்படி வில்லைப்பழித்த தருமனைக் கொல்வேனென்று வந்தஅருச்சுனனைக் கிருஷ்ணன் தடுத்தல். கூரார்முனைவாளிகொளிச்சிலையைக்குறையென்னெதிர்கூறினரம் புவிமேல், யாராயினுமாவிசெகுத்திடுமா லிதுவஞ்சினமாதலினிப்பொழுதே, தாரார்புயவென்றியுதிரட்டிரனைத்தலைகொள்வனெனத்தனுவுங்குனியா, வாராமுன்விலக்கியருச்சுனனை வருகென்றுதழீஇமதுசூதனே. |
இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) (அருச்சுனன்), 'கூர்ஆர் - கூர்மை பொருந்திய, முனை - நுனியையுடைய, வாளி-அம்புகளை, கொள் - கொண்ட, இ சிலையை - இந்த வில்லை, அம் புவிமேல் - அழகிய பூமியில், என் எதிர் - என எதிரிலே, குறை கூறினர் - குறைவாக வார்த்தை |