சொன்னவர்கள், யார் ஆயின்உம் - எவரேயானாலும் ஆவிசெகுத்திடும் - அவருயிரை (இவ்வில்) அழித்துவிடும்; இது-, வஞ்சினம் - (எனது) சபதமாம்; ஆதலின்்-, இப்பொழுதே-, தார் ஆர் புயம் - மாலைபொருந்திய தோள்களையும், வென்றி - வெற்றியையுமுடைய, யதிட்டிரனை - தருமனை, தலைகொள்வன் - தலைதுணிப்பேன்,' என- என்றுசொல்லி, தனுஉம் குனியா - வில்லையும் வளைத்து, வாராமுன்-வருவதற்குமுன்னமே (மிகவிரைவிலே), மதுசூதனன் - கண்ணன் அருச்சுனனை-, விலக்கி - தடுத்து, வருக என்று - வருவாயாக வென்றுசொல்லி (அருகேயழைத்து), தழீஇ - தழுவிக்கொண்டு,- (எ- று.)- "என்னாவுரைசெய்தலும்" என்று 208 ஆங் கவியில் வருவதனோடு தொடரும். (297) 207.- பெரியோரைப் புன்மாழிகூறுதல் தலையறுத்ததனோடு ஒக்குமென்று கண்ணன் கூறுதல். குரவோர்களைநீயெனினுங்கொலையிற் கொடிதென்றுயர்கேள்வி யர்கூறுவராக, லுரவோனையுமம்முறைகொன்றதனோ டொக்குஞ்சில புன்சொலுரைத்திடுவா, யிரவோர்தமதின்முகம்வண்மையினாலிதயத்தொடுகண்டுமகிழ்ந்து பெரும், பரவோதநெடுங்கடல்சூழ்புவியிற்பரிதாபமொழித்தபனிக் குடையோய். |
(இ-ள்.) இரவோர்தமது - இரக்கின்ற யாசகர்களது, இன்முகம் - இனிய முகத்தை, வண்மையினால் - ஈகைக்குணத்தால், இதயத்தொடு - நல்மனத்தோடு, கண்டு - பார்த்து மகிழ்ந்து - களித்து, பெரு - பெரிய, பாவு - பரவிய, ஓதம் - அலைகளையுடைய, நெடு நீண்ட, கடல் - கடலினால், சூழ்-சூழப்பட்டுள்ள, புவியில்- பூமியில் (உள்ளவர்களது), பரிதாபம் - வருத்தமாகிய வெப்பத்தை, ஒழித்த -போக்கின, பனி குடையோய் - (நல்ல ஆளுகையாகிய) குளிர்ந்தகுடையையுடையவனே! 'குரவோர்களை - ஐம்பெருங்குரவர்களை, நீ எனின்உம் - (மரியாதைபற்றிப் பன்மையாகக் கூறாமல்) நீ என்று (இகழ்ச்சியாக ஒருமையாற்) கூறினாலும், (அது), கொலையின் - (அவர்களைக்) கொல்லுதலைக்காட்டிலும், கொடிது - கொடுமையையுடையது,' என்று-, உயர் கேள்வியர்-சிறந்த நூற்கேள்விகளையுடைய பெரியோர்கள், கூறுவர் - சொல்லுவார்கள்: ஆல் - ஆதலால், அ முறை - அந்தக்கிரமப்படி, உரவோனைஉம் - வலிமையையுடைய யுதிட்டிரனையும், கொன்றதனோடு ஓக்கும் - கொன்றதோடு ஒப்பாகிற, சில புன்சொல் - சில இழிவான சொற்களை, உரைத்திடுவாய் - சொல்லிவிடுவாயாக; (எ - று.) 'பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்து, பேசினாலும் அவர்களைக் கொலைசெய்ததோ டொப்பா மென்று சான்றோர்சொல்வார், ஆதலால், இப்பொழுது நீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாக; சொன்னால் அவனைக் கொன்றதனோ டொப்பாம்.
*The plural of this pronoun 'நீ' is not contained in the Behuistan Tablets - the singular having been used instead of the plural in addressing inferiors- என்று கால்டுவெல் கூறியது, முதலடியில் நினைக்கத்தக்கது. |