தரனாமெனநீயணிநின்றிடயா மனலம்பெனவோடியிமைப்பிடைமுப் புரமேயகமாயதயித்தியரிற் பொருவோனுயிர்கைக்கொடுபோதுவமே. |
(இ-ள்.) நர நாரணர் - அருச்சுனனும் கண்ணனும், சென்று-போய் தராபதி - பூமிக்குத் தலைவனான தருமனது, தாள் நளினத்தில் - தாமரைமலர்போன்ற திருவடிகளில், விழுந்து - வீழ்ந்து நமஸ்கரித்து, ஒரு நாயகம் ஆ - ஏகாதிபத்தியமாக, வரன் ஆம் அவனை - (யாவர்க்குந்) தலைவனாகப் போகிற அத்தருமனை, புனைதேர் மிசை ஏ - அழகிய தேரின்மேலேயே, வைத்து - இறங்கிப்போகாதபடி நிறுத்தி, துனி மாறிடும் ஆறு - கோபம், நீங்கிவிடும்படி, உரைசெய்து - (சில இன்சொற்கள்) சொல்லி, (பின்பு), நீ-, அரன் ஆம் என - சிவபெருமான் போல, அணி நின்றிட - சேனையிலே நின்று கொண்டிருக்க,-யாம் - நாங்கள், அனல்அம்பு என - நெருப்பை முனையாகவுடைய (விஷ்ணுவாகிய) பாணம்போல, இமைப்புஇடை-இமைப்பொழுதுள்ளே, ஓடி - விரைந்துசென்று, முப்புரம்ஏ அகம் ஆய - மூன்று பட்டணங்களையுமே (தமக்கு) இடமாகக் கொண்ட,தயித்தியரின் - அசுரர்கள் போல, பொருவோன் - போர் செய்கிற கர்ணனது, உயிர்- உயிரை, கைக்கொடு-பறித்துக்கொண்டு (அவனைக்கொன்று), போதுவம் -வருவோம்; (எ-று.) (300) 210.- | விடைகொண்டனமென்றுவணங்கிநிலா மதியம்பகலே வொளிவிட்டதெனக், குடைகொண்டுநிழற்றவிரண்டருகுங் குளிர் சாமரமாருதமாறுபொரப், புடைகொண்டுமகீபர்திரண்டுவரப் புனைதேர் மதமாபுரவித்திரள்கைப், படைகொண்டபதாகினிமுன்பின்வரும் படி யேகினர்மாதவபற்குனரே. |
(இ-ள்.) விடை கொண்டனம் - உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறோம், என்று - என்றுசொல்லி, வணங்கி - நமஸ்கரித்துவிட்டு, நிலா மதியம் - நிலாவையுடைய பூர்ணசந்திரன், பகல்ஏ - பகற்பொழுதில்தானே, ஒளிவிட்டது என - ஒளியை வீசியதுபோல, , குடை - ஒற்றைவெண்கொற்றக் குடை, கொண்டு நிழற்ற - நிழலைச்செய்து கொண்டிருக்கவும். இரண்டு அருகுஉம் - இரண்டுபக்கங்களிலும், சாமரம்-சாமரைகள், குளிர் மாருதம் மாறு பொர-குளிர்ந்த காற்றை மாறிமாறி வீசவும், மகீபர்- பூமியைக்காக்கிற அரசர்கள், புடைகொண்டு - எல்லாப்பக்கங்களிலுஞ்சூழ்ந்துகொண்டு, திரண்டு வர-கூட்டமாகி வரவும், புனை தேர் - அழகியதேர்களும், மதம் மா - மதயானைகளும், புரவி-குதிரைகளும், திரள் கை - திரண்டகைகளையுடைய, படை - காலாட்கூட்டமும், கொண்ட - (ஆகிய நான்குஅங்கங்களைக்) கொண்ட, பதாகினி - சேனை, முன் பின் வரும்படி - முன்னும்பின்னும் வரவும், மாதவ பற்குனர் - கண்ணனும் அருச்சுனனும்,ஏகினர்-சென்றார்கள்; (எ - று.) விடைகொண்டனம் - விரைவுபற்றிய காலவழுவமைதி, இனி குடை கொண்டு -குடையால், நிழற்ற - (பிடிப்பவன்) நிழலைச்செய்ய என்றுமாம். திரள்கைப்படையெனவே, காலாளாயிற்று, புரவித்திரள் - குதிரைக்கூட்டமும், கைப்படை கொண்ட பதாகினி - கைகளில் ஆயுதங்களைக்கொண்ட காலாட்சேனையும் என்றுமாம். |