பக்கம் எண் :

158பாரதம்கன்ன பருவம்

அளித்த, பாணம் - வாருணாஸ்திரத்தை, எடா - எடுத்து,-(எ - று.) -"விடும்"
என்பதனோடுதொடரும், யமனுங் கர்ணனுஞ் சூரியன் மக்களாதலால், 'இயமன்
துணைவன்' என்றார். பணை வெம் குரல்-வாச்சியங்களின் பயங்கரமான
தொனியுமாம்.                                                (305)

215.-பவ்வம்புனல்வற்றமுகந்துவலம்படவம்பரமூடுருவப்பரவா,
வெவ்வம்புதமேழுமுடன்பொழியும்வெள்ளம்புரைவெள்ள
                                 மிகச்சொரியச்,
செவ்வம்பரமொத்தகளத்தினிடைச்செய்யோன்மகன்வன்
                                 பொடுசீறிவிடு,
மவ்வம்புநொடிப்பொழுதத்தறவோ னனுசன்றழலம்பைய
                                  வித்ததுவே.

     (இ-ள்.) பவ்வம் - கடல் புனல் வற்ற-நீர் வறளும்படி,முகந்து-(நீரை)
மொண்டுகொண்டு, வலம் பட - வலமாக, அம்பரம் ஊடு- ஆகாயத்தில், உருவ-
ஒழுங்காக, பரவா - பரவி, வெம் அம்புதம் ஏழ்உம் - கொடிய சப்தமேகங்களும்,
உடன் - ஒருசேர, பொழியும் - (பிரளயகாலத்துச்) சொரிகிற, வெள்ளம் -
நீர்வெள்ளத்தை, புரை - ஒத்த, வெள்ளம்-வெள்ளத்தை, மிக - மிகுதியாக, சொரிய-
பொழியும்படி, செம் அம்பரம் ஒத்த - (இரத்தத்தாற்) செவ்வானம்போலச் சிவந்த,
களத்தின் இடை - போர்க்களத்திலே, செய்யோன் மகன் - செந்நிறமுடைய
சூரியனது குமாரனான கர்ணன், வன்பொடு-வலிமையோடு, சீறி - கோபித்து,
விடும் -பிரயோகித்த, அ அம்பு - அந்த வாருணாஸ்திரம், நொடிப்பொழுதத்து -
கைந்நொடிப்பொழுதுள்ளே, அறவோன் அனுசன் - தருமன் தம்பியான
அருச்சுனனது, தழல் அம்பை - ஆக்கினேயாஸ்திரத்தை,  அவித்தது -
தணியச்செய்தது; (எ - று.) பி-ம்-களத்திடையிச்.

     "பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, கோடுகொண்டேழுந்த கொடுஞ்செல
வெழிலி" என்றார், முல்லைப்பாட்டிலும். அம்புதம் - நீரைக்கொடுப்பது. தழலம்பு -
அக்கினியைத் தெய்மாகவுடைய அஸ்திரம்.                            (306)

216.-இரண்டுகவிகள்-அருச்சுனன்விட்ட அஸ்திரங்களைக்
கர்ணன்மாற்றுஅஸ்திரங்களாற் போக்கின்மை கூறும்.

வாயுக்கணையேவினன்வானவர்கோன் மைந்தன்றிகழ்பேரொளி
                                    வான்மணியின்,
சேயுற்றுரகேசன்வழங்கியதிண் டிறல்வெங்கணை
                              யொன்றுதெரிந்தனனா,
லாயுப்புறமிட்டுவிடப்பொருவோனரிவெங்கணையங்கு
                                  மலைந்திடுவோன்,
வீயுற்பலமாமுனைவெங்கணைமேல் வீசிப்
                            பொருமுன்புவிழுங்கியதே.

     (இ-ள்.) வானவர் கோன் மைந்தன் - தேவராஜகுமாரனான அருச்சுனன்,
வாயுகணை - வாயவ்யாஸ்திரத்தை, ஏவினன்-தொடுத்தான்; திகழ் பேர் ஒளி-
விளங்குகிறபெரிய ஒளியையுடைய, வான் மணியின் - ஆகாயத்துக்கு
இரத்தினம்போன்றசூரியனது, சேய் - புத்திரனான கர்ணன், உற்று-பொருந்தி,
உரக ஈசன் வழங்கிய -சர்ப்பங்களுக்குத் தலைவனாகிய ஆதிசேஷன் தந்த,
திண்திறல் சர்ப்பாஸ்திரத்தை,தெரிந்தனன்-ஆராய்ந்து