சுனன்தொடுத்தனன்-; வாசிகள் ஏழ் உடை - ஏழுகுதிரையையுடைய, வெம் பகவான் -வெவ்விய சூரியன், அருள் - அருளிய வாளி - சூரியாஸ்திரத்தை, பகவான் அருள்- அச்சூரியன் பெற்ற, தியாக பராயணன்உம் - தான குணத்துக்கு மேலானஇருப்பிடமாகிய கர்ணனும், தொடுத்தனன்-; வாளி இரண்டுஉம் - அவ்விரண்டுஅஸ்திரங்களும், தக - தகுதியாக, உடன் - ஒன்றோடொன்று கதுவி - பொருந்தி,தாழாது - (ஒன்று) தாழ்வடையாமலும் உயராது - (ஒன்று) உயர்வடையாமலும்,சமம்பெற - ஒப்புமைபொருந்த முகம்வாய்கள் பிளந்தன - முனைகள் பிளவுபட்டன;மற்றுஉள - இன்னும்உள்ள, போர் - போருக்குரிய, முனை வாளிஉம் -கூர்மையையுடைய அஸ்திரங்களும், இப்படி முட்டின - இவ்வாறு ஒன்றோடொன்றுஎதிர் தடுத்தன; (எ-று.) நிறைந்த மகிமை, தைரியம், கீர்த்தி, சம்பத்து, ஞானம், வைராக்கியம் என்கிற இந்த ஆறுக்கும் பகமென்றுபெயர்; அதையுடையவன், பகவான். பர அயந என்ற இரண்டுஞ் சேர்ந்தபொழுது, பாராயணன் என்ற வடநூல்விதிப்படி னகரம் ணகரமாயிற்று. (309) 219.- பிரமாஸ்திரத்தைக் கர்ணன் ருத்திராஸ்திரத்தாலடக்க, இருவரும் சற்றுவாளாவிருத்தல். உரமந்தரவெற்பினுமிக்கபுயத் துரவோனுளம்வேஞ்சின மூறியெழப், பிரமன்கணையேவுதலுஞ்சமனார் பின்னோன்முடுகிப்பிறைமா மவுலிப், பரமன்கணையேவினனக்கணையப் பகவன்கணைநீறுபடுத்து தலிற், சரமங்கவைவேறுதொடுத்திலர்கைத் தனுவுங்குனிவித்திலர் தார்முடியோர். |
(இ-ள்.) உரம் - வலிமையையுடைய, மந்தரம் வெற்பின்உம் மந்தரமலையைக்காட்டிலும், மிக்க - மிகுந்த, புயத்து உரவோன் தோள்களின் வலிமையுடைய அருச்சுனன், உளம் - மனத்தில், வெம் சினம் - கொடியகோபம், ஊறி எழ - மேல்மேல் அதிகப்படி பிரமன்கணை - பிரமாஸ்திரத்தை, ஏவுதலும் - தொடுத்த வளவில், சமனார் பின்னோன் - யமனுக்குப் பின்னே பிறந்த கர்ணன்,- முடுகி- விரைந்து, பிறை மா மவுலி பரமன் கணை - பிறைச்சந்திரனைச் சூடிய பெரிய முடியையுடைய சிறந்த ருத்திரனது அஸ்திரத்தை, ஏவினன் - தொடுத்தான்; அ கணை - அந்த ருத்திராஸ்திரம், அ பகவன் கணை - அந்தப்பிரமாஸ்திரத்தை, நீறுபடுத்துதலின் - சாம்பலாக்கிவிட்டதனால், அங்கு - அப்பொழுது, தார் முடியோர்- மாலையைச்சூடிய மயிர்முடியையுடைய அவ்விருவரும், சரம் அவை வேறு -வேறு அம்புகளை, தொடுத்திலர் - தொடுத்தாரில்லை; கை தனுஉம் - கையிலுள்ளவில்லையும், குனிவித்திலர் - வளைத்தாரில்லை; (எ - று.) சமன் - யமன் என்பதன் சிதைவு; ஸமன் என்பதன் திரிபு எனினுமாம்: யாவரிடத்தும் பக்ஷபாதமின்றி நடுவுநிலையாக இருப்பவன் என்க. (310) |