பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்161

220.-படுகளச்சிறப்பு.

இவ்வா றிமையோர் கள்வரங் களினா லிருவோர் களுமெய்
                                   தியமாமறைகூர்,
வெவ்வா ளிகளோ டியுடற் றுதலால் வெஞ்சே னையடங்
                                 கமடங் கியபின்,
மைவா ளனகந் திசைவாண் முகமா மலையா முலைவா
                                ரிதிவண் டுகிலஞ்,
செவ்வா றுபடுத் தலின்மே தினியா டிருமே னிய
                            ணிந்ததுசெவ் வணியே.

     (இ -ள்.) இ ஆறு - இவ்விதமாக, இருவோர்கள்உம் - கர்ணனும் -
அருச்சுனனும், இமையோர்கள் வரங்களினால் - தேவர்கள் கொடுத்தருளிய
வரங்களால், எய்திய - பெற்ற, மா மறை கூர் - சிறந்த மந்திரங்கள் பொருந்திய,
வெம் வாளிகள் - கொடிய அஸ்திரங்கள், ஓடி உடற்றுதலால் - விரைந்து சென்று
அழித்தலால், வெம் சேனை - கொடிய இரண்டுசேனைகளும், அடங்க - எல்லாம்,
மடங்கிய பின் - அழிந்தபின்பு, மை வான் அளகம் - கறுத்த ஆகாயமாகிய
கூந்தலையும், திசை ஆம் வாள் முகம் - திக்குக்களாகிய ஒளியையுடைய
முகத்தையும், மலை ஆம் முலை - மலையாகிய தனங்களையும், வாரிதி வண்
துகிலம் - கடலாகிய அழகிய ஆடையையும், செம் ஆறு- சிவந்த ரத்தப்பெருக்கு,
படுத்தலின் - செம்மையாக்கியதனால், மேதினியாள் - பூமிதேவியினது, திரு
மேனி -அழகிய உடம்பு, செம் அணி - செந்நிறமுள்ள அலங்காரத்தை,
அணிந்தது -தரித்தாற் போன்றது; (எ -று.)   

     மை வான் - மேகங்களையுடைய வானமுமாம். துகிலம், அம் - காரியை,
"காரார் வரைக்கொங்கைக் கண்ணார் கடலுடுக்கைச், சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப்
பேராற்றுப், பேரார மார்பிற் பெருமா மழைக்கூந்தல், நீரார வேலி நிலமங்கை",
"வானியங்கு தாரகைமீன், என்னு மலர்ப்பிணைய லேய்ந்த மழைக்கூந்தல், தென்ன
னுயர்பொருப்புந் தெய்வ வடமலையும், என்னுமிவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கு" என்றார் பெரியோரும்.                     (311)

வேறு.

221.-மூன்றுகவிகள்-கர்ணன் அருச்சுனன் கழுத்தையே
யிலக்காகக் கொண்டு நாகாஸ்திரத்தை எய்தமைகூறும்.

மகபதி மைந்தனை மீளவுந் தினகரன் மகனுயிர்
                   கொண்டிடவேணுமென் றுறுசின,
மிகமிக வன்சிலை கோலியொண் கிரிபல மிடைவனம்
                    வெந்திட லோடியந் தரமிசை,
புகைகது வும்படி சீறிவெம் பொறிவிடுபுரிதழன் மண்டிய
                             நாளிலம் பெனவரு,
மிகலுடை வெம்பகு வாய்களைந்துடையதொ ரெழில்கொள்பு
                   யங்கனை யெவவென் றுசவியே.

இதுவும் மேற்கவியும்-ஒருதொடர்

     (இ-ள்.) தினகரன் மகன் - சூரியகுமாரனான கர்ணன், மீள உம் - பின்பு,
மகபதி மைந்தனை - இந்திரகுமாரனான அருச்சுனனை, உயிர் கொண்டிட வேணும்
என்று - சொல்லவேண்டுமென்று, உறு சினம் - பெருங்கோபம், மிக மிக -
மேன்மேல் அதிகப்பட,