மேதுணிந்திடும்வகை, யழலெழுநெஞ்சொடுபடிநின்றுதையினனளிமுரல்பங்கய நாயகன்குமரனே. |
(இ -ள்.) அளி முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற. பங்கயம் - தாமரைக்கு, நாயகன் - தலைவனான சூரியனது, குமரன் - குமாரனான கர்ணன்,- மழு உறு - பரசு என்னும் ஆயுதம் பொருந்திய, செம் கை - சிவந்த கையையுடைய, இராமன் என்பவன் - பார்க்கவராமனென்பவர், அருள் - கொடுத்தருளிய, வரி சிலை - கட்டமைந்தவில்லை, கொண்டு - (கையிற்) பிடித்து, அணி நாணி - அழகிய நாண், தன் செவியோடு - தனது காதுகளோடு, தழுவுற - பொருந்தவும்,- மண்டலம் ஆய் -வட்டவடிவமாய், வளைந்திட - (வில்) வளையவும், தறுகண் - அஞ்சாமையையுடைய,முது நெடு சினம் மூளும் - பழைய பெருங்கோபம் மிகுந்த, வெம் கணையினை -கொடிய நாகாஸ்திரத்தை, எழிலிமதங்கயம் வாகனன் - மேகமாகியானையைவாகனமாகவுடைய இந்திரனுக்கு, தனயனது - குமாரனான அருச்சுனனுடைய, எழில்பெறு - அழகைப் பெற்ற, கந்தரம்ஏ - கழுத்தே, துணிந்திடும்வகை - அறுபடும்படி,அழல் எழும் நெஞ்சோடு - வெப்பம்பொருந்திய மனத்துடனே, நாடி நின்று -இலக்குப் பார்த்து நின்று, உதையினன் - பிரயோகித்தான்; (எ-று.) மழுவுறு கை யிராமன் - பரசுராமன்; இவர், ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஆறாம் அவதாரம்: இவரிடத்துக் கர்ணன் பிராமணவடிவமாச்சென்று தநுர்வேதம் பயின்றான், முது சினம் - தன்தாயை அருச்சுனன் கொன்றதனாலாகியது. கந்தரமே, ஏகாரம் - பிரிநிலையோடு தோற்றம், சூரியனைக் கண்டமாத்திரத்தில் தாமரைமலர்தலால், தாமரையாகிற பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்பது, மரபு. (314) 224.- அந்தநாகக்கணை அருச்சுனனுடைய கிரீடத்தைத் தாக்கித் தள்ளுதல். வலவனெனுந்திருமாலதன்றுனைகெழு வரவையறிந்தணிதேரின் வன்றிகிரிக, ளிலகியவங்குலியாறிரண்டவனியி னிடைபுதையும்படி தாழநின்றிடுதலி, னலர்கதிதந்தருள்காளையம்பெனவிடு மரவுதனஞ் ஏயன்மார்பையுங்களனையும், விலகியவன்றனதாதையன்றுதவியவெயின்மகுடந்தனைமோதி வந்திடறவே. |
இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர் (இ -ள்.) வலவன் ஏனும் - அருச்சுனசாரதி யெனப்படுகிற, திருமால் - கண்ணன், அதன் - அந்நாகாஸ்திரத்தின், துனை கெழு - உக்கிரம் [வேகம்] மிகுந்த,வரவை - வருகையை, அறிந்து - தெரிந்து, அணி தேரின் - அழகிய (தமது)தேரினது, வல் திகிரிகள் - வலிய சக்கரங்கள், இலகிய - விளங்கிய, அங்குலி ஆறுஇரண்டு - பன்னிரண்டு அங்குலம், அவனியினிடை - பூமியில், புதையும்படி -அழுந்தும்படி, தாழ நின்றிடுதலின் - அழுத்தி நின்றதனால், அலர் பதிர் தந்தருள்காளை - விளங்குகிற கிரணங்களையுடைய சூரியன் பெற்றருளிய பிள்ளையானகர்ணன், அம்பு என விடும் - அஸ்திர |