இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர். (இ - ள்.) பிறகு - (கிரீடத்தை இடறின) பின்பு, எழில்கூர் - அழகுமிகுந்த, தனஞ்சயன் - அருச்சுனன், புரிந்து - விரும்பி, விடு - விட்ட, பிறைமுகம் வெம் கணையால் - கொடிய அர்த்த சந்திரபாணத்தால், அழிந்திடு - அழிகிற, பணி - நாகம், திறலுடன் - வலிமையுடனே, முன் துணி சேரும் ஐந்தலையொடு - முன்னே துணி பட்ட ஐந்துதலைகளோடு, திரியஉம் வந்து - மீளவும் வந்து, எனை ஏவுக என்று - என்னை (இன்னொருமுறை) விடுவாயாக வென்று, அலறஉம் - கதறிச் சொல்லவும்,- வரி கழல் - கட்டிய வீரக்கழலையுடைய, அங்கர் குல அதிபன் - அங்கநாட்டார்கூட்டத்துக்குத் தலைவனான கர்ணன், 'குந்தி - பாண்டவர் தாய், உறவொடு - (தாய்) முறைமையோடு, வழாவரம் பெறுதலின் - தவறவொண்ணாத வரத்தை (என்னிடம்) பெற்றதனால், உரை வழுவும் - (மறுபடி உன்னைவிட்டால் ) என்வார்த்தைபொய்க்கும்; (ஆதலால்), பெரிது ஆகுலம் புரியின்உம் - மிகுந்த வருத்தத்தைச்செய்தாலும், இனி - இனிமேல், மறு கணைஒன்று - மற்றொருதரம் நாகாஸ்திரத்தை, முனிந்து - கோபித்து, தொடேன் - தொடுக்கமாட்டேன்,' என - என்று, புகல - சொல்லிவிட,- (எ-று.)-"உரகம்***நொந்து உரைசெய்து மறலியிடந்தனிலானது" என்க. ஐந்தலை - ஐந்து ஈறுகெட்டது; [நன் - உயிர்-38.] (317) 227.- கர்ணனை நொந்துகொண்டு அந்நாகம் இறத்தல். எரியிடை வெந்துடல் வாலுமுன் றறிதலி னிடரற வுய்ந்திட நீபெரும்புகலென, விரைவொடு வந்தெனை வாளிகொண் டிடுகென விச யனை வென்றிடு மாறுளங் கருதவு, மொருதனி வெஞ்சிலை கால்வளைந்திலதுகொ லொருபடி யும்பிழை போனதுன் றொடையென, வரிகழலங்கர்பி ரானைநொந் துரைசெய்து மறலியி டந்தனி லானதன் றுரகமே. |
(இ -ள்.) உரகம் - அந்நாகம், 'எரியிடை - நெருப்பிலே, உடல் வெந்து உடம்புஎரிந்து, வால்உம் முன் தறிதலின் - வாலும் முன்னே (அருச்சுனன் கணையால்)அறுபட்டதனால், இடர் அற - துன்பமில்லாமல், உய்ந்திட - (யான்) பிழைக்கும்பொருட்டு, நீ பெரு புகல் என - நீ பெரிய புகலிடமென்று எண்ணி,- விரைவொடுவந்து-வேகத்தோடு (உன்னிடம்) வந்து, எனை வாளி கொண்டு இடுக என - என்னை அஸ்திரமாகக்கொள்ளுவாயாகவென்றுசொல்ல, விசயனை வென்றிடும்ஆறு - அருச்சுனனைச் சயிக்கும்படி, உளம் கருதஉம் - (நீயும்) மனத்தில்நினைக்கவும், ஒரு தனிவெம் சிலை - ஒப்பற்றதொரு கொடிய வில், கால் வளைந்திலது கொல் - (செவ்வையாகக்) கோடிவளையவில்லையோ? உன் தொடை -நீ தொடுத்த இலக்கு, ஒரு படிஉம் - (எய்த) ஒரு தரத்திலும், பிழைபோனது -தவறிப்போய்விட்டது,' என - என்று, வரி கழல் அங்கர் பிரானை -கட்டியவீரக்கழலையுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணனை நோக்கி, நொந்துஉரைசெய்து - வருத்தத்தோடு சொல்லிவிட்டு, அன்று - அப்பொழுது, மறலிஇடந்தனில் யமனிடத்தில், ஆனது - சென்றது; [இறந்த தென்றபடி]; (எ - று.) |