களையும், முதிரும் எரி விடம் அரவு எழுதிய கொடிஉம் - மிக்க வெதும்புகின்ற விஷத்தையுடைய கோபிக்கிற பாம்பின் வடிவத்தை யெழுதியுள்ள துவசத்தையும், உடையவன் - உடையவனான துரியோதனனுடைய, எலுவல்உம் - தோழனாகிய கர்ணனும்,- முரசு - முரசத்தின் வடிவத்தை, உயர் கொடியில் - உயர்ந்த துவசத்தில், எழுதிய-, குரு பதி - குருகுலத்துக்குத் தலைவனான தருமபுத்திரனது, இளவல்உம் - தம்பியாகிய நகுலனும்,- நெடிய வரி சிலை - நீண்ட கட்டமைந்த (தமது) வில், நிலைபெற வளையஉம் - நிலையாக வளைந்திருக்கவும்,- நிமிர விடு கணை - வேகமாய்எய்யப்படுகின்ற (தமது) அம்புகள், நிரை நிரை முடுகஉம் - வரிசை வரிசையாகவிரைந்து செல்லவும்,- இடியில் - இடியோசையைக்காட்டிலும், எழுமடி - ஏழுமடங்குஅதிகமாக, அதிர்குரல் - ஆரவாரிக்கின்ற ஓசை, விளையஉம் - உண்டாகவும்,-இவுளி அமர் - குதிரைமேலிருந்து செய்யும் போரை, கடிது இகலொடு - மிக்கவலிமையுடனே, புரிய - செய்ய,- (எ -று.) எலுவல் - கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுட் சீதநாட்டுத் திசைச்சொல்; பெண்பால் - இகுளை. முடியும் இருகவிகையும் இரு கவரியும் கொடியும் - அரசர்க்கு உரிய அங்கங்கள். (28) 29.- கர்ணனது குதிரைமுதலியன அழிதல். நகுலன்விடுகணைவிதரணகுணபதி நடவுகுரகதநடை பயில்குரமற, விகலும்வரிசிலைநடுவறவடமற விடுகவசமறவெழுதருமிருபுய, சிகரிபுதையவுமுரமுழுகவுநுத றிலகமெனவொளிதிகழவு மலைதலின், மகிழ்வுசினமெனுமிருகுணமுடன்மனமறுகநிலனிடைவலனுற விழியவே. |
(இ-ள்.) நகுலன்-, -விடு கணை - (தான்) எய்கின்ற அம்புகளினால், விதரண குண பதி நடவு - தானகுணத்துக்குத் தலைவனான கர்ணன் ஏறிச்செலுத்துகின்ற, குரகதம் - குதிரையின், நடை பயில் குரம் - கதிகளைப் பயின்ற குளம்புகள் [கால்கள்], அற - அறுபடவும் - இகலும் - போர்செய்கின்ற, வரி - கட்டமைந்த, சிலை - (அக்கர்னனது) வில், நடு அற - நடுவில் அற்றுப்போகவும்,-எழுதரும் இருபுயசிகரி - ஒங்கிவளர்ந்த மலை போன்ற இரண்டு தோள்களில் , புதைய உம் -அழுந்தவும்,- உரம் - மார்பில், முழுகஉம் - உட்புகவும்,- நுதல் - நெற்றியில், திலகம்என - சிந்தூரத் திலகம்போல, ஒளி திகழஉம்- (இரத்தத்தால்) சிவந்த ஒளிவிளங்கவும்,- மலைதலின் - போர் செய்ததனால்,- (கர்ணன்),- மகிழ்வு சினம் எனும்இரு குணமுடன் - களிப்பும் கோபமும் என்கிற இரண்டு குணத்தோடும், மனம் மறுக- மனஞ்சுழல, நிலனிடை - பூமியில், வலன் உற - வலிமை பொருந்த, இழிய -இறங்க, (எ -று.) எழு தரும் - இருப்புத்தூணை யொத்த, தோளுமாம், மகிழ்வி - சிறந்தவீரனோடு தனக்குப்போர்நேர்ந்ததனாலும், தன் தம்பியாகிய அவனது போர்த்திறத்தைப் கண்டதனாலு மென்க. (29) |