பக்கம் எண் :

172பாரதம்கன்ன பருவம்

     (இ-ள்.) தூண்டிய - (அருணனாற் செலுத்தப்படுகிற, கவனம் துரகதம் -
கதிகளையுடைய குதிரையைப் பூட்டிய, தட தேர் - பெரிய தேரையுடைய, சுடர் -
முச்சுடர்களுட், சிறந்த சூரியன், தர - பெற, தோன்றிய - பிறந்த, தோன்றால்-
வீரனே!மேருவினிடை-மகாமேருகிரியினிடத்தில், தவம் பூண்டேன் - தவத்தைச்
செய்துகொண்டிருந்தவனும், ஈண்டிய - மிகுந்த, வறுமை - தரித்திரத்தால், பெருதுயர்
உழந்தேன் - பெரிய துன்பத்தை அனுபவித்தவனுமாகிய யான், தாண்டிய -
மோதுகிற, தரங்கம் - அலைகளையுடைய, கருகடல்-கரியகடலினால், உடுத்த -
சூழப்பட்ட, தரணியில் - பூமியில், தளர்ந்தவர் தமக்கு - (வறுமையால்) தளர்ச்சியை
யடைந்தவர்களுக்கு, நீ-, வேண்டிய - (அவர்கள்) வேண்டின பொருள்களை தருதி-
கொடுக்கிறாய், என - என்று, கேட்டேன்-கேள்விப்பட்டு வந்தேன்; (எனக்கு),
இயைந்தது ஒன்று-கொடுக்கக்கூடியதொரு பொருளை, இ கணத்து இப்பொழுதே,
அளிப்பாய் - கொடுப்பாயாக; (எ-று.)-தோன்றால் தோன்றல் என்பதன் விளி.  (329)

239.-வேஷதாரி கர்ணனைப் புண்ணியமெல்லாம் தரக்கேட்டல்.

என்றுகொண்டந்தவந்தணனுரைப்ப விருசெவிக்கமுதெனக்
                                       கேட்டு,
வென்றிகொள்விசயன்விசயவெங்கணையான்மெய்தளர்ந்திரத
                               மேல்விழுவோன்,
நன்றெனநகைத்துத்தரத்தகுபொருணீநவில்கெனநான்மறையவனு,
மொன்றியபடிநின்புண்ணியமனைத்துமுதவுகென்றலுமுள
                                   மகிழ்ந்தான்.

     (இ-ள்.)  அந்த அந்தணன் - அந்தப் பிராமணன், என்று கொண்டு உரைப்ப-
என்றுசொல்ல, (அவ்வார்த்தையை), வென்றிகொள் - வெற்றியைக்கொண்ட, விசயன்-
அருச்சுனனது, விசயம் - விசேஷஜயத்தைத் தருகிற, வெம்கணையால் - கொடிய
பாணங்கனினால், மெய் தளர்ந்து - உடம்பு தளரப்பெற்று, இரதம்மேல் விழுவோன்-
தேரின்மேல் விழும் நிலைமையிலுள்ளவனாகி  கர்ணன், இரு செவிக்கு அமுது என
-இரண்டு காதுகளுக்கும் அமிருத மென்னும்படி (மிகஇனிப்பாக), கேட்டு -
செவியுற்று, நன்று என - நல்லதென்று சொல்லி, நகைத்து - சிரித்து, தர தகு
பொருள்-(உனக்குக்) கொடுக்கத்தக்க பொருளை, நீ நவில்க என - நீ
சொல்லுவாயாகஎன்று சொல்ல,-நால் மறையவன்உம் - நான்குவேதங்களையும்
அறிந்தஅப்பிராமணனும், 'நின்  புண்ணியம் அனைத்துஉம் - நீ செய்துள்ள
நல்வினைமுழுவதையும், ஒன்றியபடி, - உள்ளபடியே, உதவுக - கொடுப்பாயாக,'
என்றலும் -என்று சொன்னவளவில், உளம் மகிழ்ந்தான்-(கர்ணன்) மனங்களித்தான்;
(எ - று)   

     நன்று என்றது - நீ சொன்னபடியே தருவேனென்று தனது உடன்பாட்டைத்
தெரிவித்தபடி.                                                   (330)

240.-இரண்டுகவிகள்-ஒருதொடர்; கர்ணன் மனவுவப்போடு
தன்புண்ணிய மனைத்தையுந் தாரைவார்த்துக்கொடுக்க
அவ்வேதியன் பெற்றமை கூறும்.

ஆவியோநிலையிற்கலங்கியதியாக்கையகத்ததோபுறத்துதோ
                                      வறியேன்,
பாவியேன்வேண்டும்பொருளெலாயக்கும்பக்குவந்தன்னில்வந்