பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்177

வதற்குக் கிடைக்காத, பெரு பயன் - பெரிய (மோட்சமாகிய) பிரயோஜனத்தை,
நின்திரு அருளால் - உனது மேன்மையான கருணையினால், பெற பெற்றேன்-
(இனி)அடையப்பெற்றேன்; (எ - று.)

     கங்கைக்குத் தெய்வத்தன்மை - தன்னில் ஒருகால் மூழ்கியவருக்குங்
கருமமனைத்தையும் போக்கி நற்கதியளித்தல். அனிலயோக மென்னும் பாடத்துக்கு-
வேறொன்றையுமுண்ணாமற் காற்றையே யுண்டு செய்யும் யோகமென்க.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - இச்சருக்கத்தின் பதினேழாங்கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                            (337)

247.நீலநெடுங்கிரியுமழைகிலும்பவ்வநெடுநீருங்காயாவு
                          நிகர்க்குமீந்தக்,
கோலமும்வெங்கதைவாளஞ்சங்குநேமி கோதண்ட
               மெனும்படையுங்குழைத்தவாச,
மாலைநறுந்துழாய்மார்புந்திரண்டமலர்ந்தமுகமுஞ்சோதிக்
         கதிர்முடியுமிம்மையிலேகண்ணுற்றேனே.

     (இ-ள்.) நீலம் - நீலரத்தினமயமாகிய, நெடு கிரிஉம் - பெரிய மலையையும்,
மழை முகில்உம் - மழைபொழிகிற காளமேகத்தையும், பவ்வம் நெடு நீர்உம் -
கடலின் மிகுந்த நீரையும், காயாஉம் -காயாமலரையும், நிகர்க்கும் - ஒக்கின்ற,-இந்த-,
கோலம்உம் - (உனது) திருமேனியையும், வெம் - (பகைவர்க்குக்) கொடிய, கதை -
கதையும், வாளம் - வாளும், சங்கு - சங்கமும், நேமி - சக்கரமும், கோதண்டம் -
வில்லும், எனும் - என்கிற, படைஉம் - பஞ்சாயுதங்களையும், குழைத்த - தளிர்த்த,
வாசம்-வாசனையையுடைய, நறு - நல்ல, துழாய் மாலை -
திருத்துழாய்மாலையையணிந்த, மார்புஉம் - திருமார்பையும், திரண்ட தோள்உம் -
திரட்சியாகவுள்ள தோள்களையும், மணிகழுத்துஉம் - அழகிய திருக்கழுத்தையும்,
செம் இதழ்உம் - சிவந்த திருவதரத்தையும், காலம் - (தக்க) பருவத்தில் மலர்ந்த,
வாரிசாதம் மலர் என - தாமரைப்பூப்போல, மலர்ந்த - மலர்ந்துள்ள, முகம்உம் -
திருமுகத்தையும், சோதி கதிர் முடிஉம் - மிகுந்த ஒளியையுடைய - திருமுடியையும்,
இம்மையில்ஏ - இப்பிறப்பில்தானே, கண்ணுற்றேன் - (பிரதியக்ஷமாகத்)
தரிசிக்கப்பெற்றேன்; (எ - று.)-வாரி  ஜாதம் - நீரிற் பிறப்பது. சோதிகதிர் -
ஒருபொருட்பன்மொழி. பி-ம்:  குழையுங் காதும் காலை.                (338)

248.தருமன்மகன்முதலானவரியகாதற்றம்பியரோடமர்மலைந்து
                                தறுகணான்மைச்,
செருவிலெனதுயிரனையதோழற்காகச் செஞ்சோற்
                  றுக்கடன்கழித்தேன்றேவர்கோவுக்,
குரைபெறுநற்கவசமுங்குண்டலமுமீந்தேனுற்றபெருநல்
                     வினைப்பேறுனக்கேதந்தேன்,
மருதிடைமுன்றவழ்ந்தருளுஞ்செங்கண்மாலேமாதவத்
                   தாலொருதமியன்வாழ்ந்தவாறே.

     (இ-ள்.) முன் - முன்னே (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பிராயத்தில்), மருது
இடை - இரட்டை மருதமரங்களினிடையே, தவழ்ந்தருளும் - தவழ்ந்துசென்றருளிய,
செம் கண் மாலே - சிவந்த திருக்கண்களையுடைய திருமாலென்னுந்
திருநாமமுடையவனே!