பக்கம் எண் :

178பாரதம்கன்ன பருவம்

தறுகண் - அஞ்சாமையோடுகூடிய, ஆண்மை - பராக்கிரமத்துக்கு இடமான,
செருவில் - போர்க்களத்தில், எனது உயிர் அனையதோழற்கு ஆக - என்னுடைய
உயிரையொத்த நண்பனாகிய துரியோதனன் பொருட்டாக, தருமன் மகன் முதல்
ஆன - தருமபுத்திரன் முதலய, அரிய - (பெறுதற்கு) அருமையான, காதல் -
அன்பையுடைய, தம்பியரோடு - தம்பிமார்களுடனே, அமர் மலைந்து - போர்
செய்து, செம் சோறு கடன் கழித்தேன்-(அவன் எனக்குச்) செவ்வையாகப்
போகட்டுவந்த சோற்றுக்குப் பிரதியுபகாரஞ்செய்துவிட்டேன்; தேவர் கோவுக்கு -
தேவேந்திரனுக்கு, உரைபெறு - உயர்ச்சி பெற்ற, நல் கவசம்உம் - நல்ல
கவசத்தையும், குண்டலம்உம் - குண்டலங்களையும், ஈந்தேன் - தானஞ்செய்தேன்;
உற்ற பெருநல்வினை பேறு - பொருந்திய பெரிய புண்ணியமாகிய பயனை,
உனக்கே-, தந்தேன் - கொடுத்தேன், ஒருதமியன் - (உன்னையன்றி) வேறு
துணையுங் கதியுமில்லாத ஒப்பற்ற யானொருத்தன், மா தவத்தால்- (முற்பிறப்பிற்
செய்த) சிறந்த தவத்தின் பயனால், வாழ்ந்த ஆறு ஏ - இப்படிப்பட்ட
பெருவாழ்வையடைந்த விதம் வியக்கத்தக்கதே; (எ - று.)             (339)

249.வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.

     (இ-ள்.) வான் பெற்ற - ஆகாயத்திற் பொருந்திய, நதி-தேவகங்காநதி,
கமழ் -தோன்றின, தாள் - (உனது) திருவடிகளை, வணங்கப்பெற்றேன் -
சமஸ்கரிக்கப்பெற்றேன்; மதி பெற்ற - சந்திரனை யுண்டாக்கின, திரு உளத்தால் -
மேன்மையான  (உனது) மனத்தினால், மதிக்கப்பெற்றேன் - கௌரவிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற - தேனையுடைத்தான், துழாய் - திருத்துழாயினாலாகிய, அலங்கல் -
மாலையையும், களபம்-கலவைச் சந்தனத்தையும் அணிந்த, மார்புஉம் - (உனது)
திருமார்பும், திருபுயம்உம் - திருத்தோள்களும்,  தைவந்து தீண்டப்பெற்றேன் -
(என்மேல)் தடவி ஸ்பரிசிக்கப்பெற்றேன்; ஊன் பெற்ற - (பகைவர் உடம்பின்)
தசையை (நுனியிலே பொருந்த)ப் பெற்ற, - பகழியினால் - (அருச்சுனன்)
பாணத்தினால், அழிந்து - வலிகெட்டு, வீழ்ந்துஉம் - கீழேவிழுந்த பின்பும்,
உணர்வுடன் - நல்லறிவோடு, நின் திரு நாமம் - உனது சிறந்த பெயர்களை,
உரைக்கப்பெற்றேன் - சொல்லப்பெற்றேன்; யான் பெற்ற - நான் அடைந்த, பெரு
தவம் பேறு  - பெரிய தவத்தினாற் பெறுதற்குரிய பாக்கியத்தை, என்னை அன்றி -
என்னையல்லாமல், இரு நிலத்தில்பிறந்தோரில் - பெரிய நிலவுலகத்திற்
பிறந்தவர்களுள், யார் - வேறுயார், பெற்றார்-? (எ - று.)

     திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்திலே சென்ற அவரது
திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க அந்த
ஸ்ரீபாததீர்த்தமே கங்காநதி