பக்கம் எண் :

180பாரதம்கன்ன பருவம்

மெய் கருணை - உண்மையான அருளையுடைய, யானே - நான்தான், என்று -
என்றுசொல்லி, போய்-, மீண்டு்உம் - மறுபடியும், விசயற்கு - அருச்சுனனுக்கு,
தேர்வலவன் ஆனான் - தேர்ப்பாகனாய் விட்டான்; (யாரேனில்), ஏ கடல்உம் -
எல்லாகடல்களும், எ கிரிஉம் - எல்லா மலைகளும்,  எல்லா மண்உம் -
எல்லாவுலகங்களும், இமையோர்உம் - தேவர்களும், மானுடர்உம் - மனிதர்களும்,
எல்லாம் - மற்றஎல்லாச்சராசரங்களின் வடிவங்களும், ஆகி-, மைகண் - மையிட்ட
கண்களையுடைய, இள கோவியர் - இளம்பருவத்தையுடைய இடைப்பெண்களது,
நுண் - மெல்லிய, துகில்உம் - சேலைகளையும், நாண்உம் - வெட்கத்தையும், வரி
வளைஉம் - அழகிய வளைகளையும், மடநெஞ்சுஉம் - மடமைக்குணத்தையுடைய
மனத்தையும், வாங்கும் - கவர்ந்த, மால் - திருமால்; (எ - று.)

     சாய்வித்தேன் - அந்த அஸ்திரத்தை அழியச்செய்தேன் என்றுமாம்.
கோவியர்-பசுக்களைக்காப்பவன் என்னும் பொருளதாகிய கோபன்என்பதன்
பெண்பாலானகோபீ என்பதன் விகாரமாகிய கோவிஎன்பதன்பன்மை. கண்ணன்
இளமையில்ஒருநாள் குளத்தில்நீராடிக் கொண்டிருந்த இடைப்பெண்களது
துகில்களைவிளையாட்டாக் கவர்ந்து கொண்டுபோய் ஒளித்தார். கண்ணன்
விஷயத்திற் கொண்டகாமநோயா லுண்டான விரகவேதனையால்
கோபஸ்திரீகளுக்கெல்லாந் துகில்நெகிழ்ந்து போகின்றதனாலும், நாணம்
அழிதலாலும், வேதனைமிகுதியால்உடம்புமெலிதல்பற்றிக் கைவளைகள் கழன்று
விழுந்துவிடுதலாலும், அவர்கள் நெஞ்சுதன்வசமன்றிக் கிருஷ்ணவசமாதலாலும்,
இங்ஙனங் கூறினார். நாண், மடம் என்பன -பெண்களுக்கு உரிய முக்கிய
குணங்கள். நாண், - தமக்கு ஒவ்வாத கருமங்களைச்செய்ய வெள்குதல்; மடம் -
அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை,மூன்றாமடியால் எம்பெருமானது
ஜகச்சரீரகத்வத்தையும், நான்காமடியால்சௌலப்பியத்தையும் வெளியிடடார். (342)

252.,-கிருஷ்ணன் சொற்படி அருச்சுனனெய்த அம்பாற்
கர்ணன் வீழ்தல்.

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.

     (இ - ள்,)  (கண்ணன் அருச்சுனனை நோக்கி), நீ-, பகலோன் -
பகலைச்செய்பவனாகிய சூரியன்,  மேல் பால் பவ்வத்தில் படுவதன் முன் -
மேற்குத்திக்கு்கடலில் விழுந்து அஸ்தமிக்கு முன்னமே, பகலவன் தன்மதலையை-
(அச்)சூரியபுத்திரனான கர்ணனை, படுத்தி - கொல்வாய்' என்ன - என்றுசொல்ல,-
இகல் விசயன்  - பராக்கிரமத்தையுடைய அருச்சுனன்,-உறுதி உற -
வலிமைபொருந்த, அஞ்சரீகம் எனும் அன்பால் - அஞ்சரீகம் என்னும்
பெயரையுடைய  அம்பினால், அவன் இதயம் இலக்கம் ஆக - அவனது மார்பு
இலக்காக,