264.- ஐந்துகவிகள்-பாண்டவரின் புலம்புதலைத் தெரிவிக்கும். கன்னியிளம்பருவத்திலரியமாவெனுங்கடவுள்காதல்கூர மன்னியமந்திரமெமக்குமின்றளவுமுரைத்திலையான்மறந்தாய் கொலலோ பின்னியசெஞ்சடைக்குழலாயீதென்னபேரறிவுபெற்றதாயிலோ னன்னியநன்றாயிருந்ததிப்படியேபிழைப்பிப்பதறிந்திலமே. |
(இ-ள்.) கன்னி இளம் பருவத்தில் - கன்னிகையாயிருந்த இளமைப்பருவத்தில்தானே, அரியமா எனும் கடவுள்-சூரியனென்று சொல்லப்படுகின்ற தேவன், காதல் கூர - (உன்னிடத்துக்) காதல்மிகும்படி மன்னிய -(உன்னிடத்து வந்து) பொருந்திய, மந்திரம் - மந்திரத்தைப்பற்றி இன்று அளவும்-,எமக்கும்-, உரைத்திலை - (நீ) சொல்லாதிருந்திட்டாய்; மறந்தாய்கொல்ஓ - (அதனை)மறந்திட்டாயோ? பின்னிய செஞ்சடைக் குழலாய் - சடையாய்த்திரித்தமயிர்முடியுடையவளே! இது -(இங்ஙன்பெற்றபிள்ளைகட்கும் செய்தி தெரியாதபடிமறைத்துவைத்த) இச்செய்கை, என்ன பேர் அறிவு- என்னபேரறிவுடைமையாம்?பெற்ற தாயின் - பெற்ற தாயைக் காட்டிலும், அன்னியம் - வேறுபட்டசுற்றமே, நன்றுஆய் இருந்தது-; இப்படி பிழைப்பிப்பது - இப்படி தவறுசெய்யச் செய்வதை,அறிந்திலேம் - (வேறெங்குங்) கண்டிலேம்; (எ- று.)-ஏகாரம் - இரக்கம். இது-தருமன்புலம்பல். குந்தியைநோக்கிக் கூறியது, குந்திதேவி பெற்றதாயாக இராமல் வேறு சுற்றமாக இருந்தால், பிள்ளைகட்குக்செய்தியை மறைத்தாளென்ற பழிப்பு வாரதாகையால், 'பெற்றதாயினும்அன்னியம்நன்றாயிருந்தது'என்ற தென்னலாம். பிழைப்பித்தல் - அண்ணனான கர்ணனைக்கொல்லுமாறு செய்வித்தமை. (355) 265. | ஊற்றிருந்தவிழியினளாயுனைப்பயந்தாண் மனமறுகவுயி ராய்நின்ற, காற்றிருந்தவிடந்தேடிக்கணைபலவுமுடல்குளிப்பக் கன்னாவின்று, கூற்றிருந்தபதிதேடிக்குடியிருக்கநடந்தனையோகொற்ற வேந்தாய், வீற்றிருந்திங்கைவேமுமடிவருடப் புவியாளவிதியிலாதாய். |
(இ-ள்.) கன்னா - கர்ணனே! ஊற்று இருந்த விழியினள் ஆய் - ஊற்றிருக்கின்றதென்று கருதுமாறு நீர்சுரக்கின்ற கண்களையுடையவளாய், உனை பயந்தாள் - உன்னைப்பெற்ற தாய், மனம் மறுக - சோகத்தினால் மனஞ்சுழல, உயிர் ஆய் நின்றகாற்று இருந்த இடம் தேடி கணை பலஉம் உடல் குளிப்ப - உயிரென்று சொல்லப்பட்ட காற்றானது தங்கியிருந்த இடத்தைத்தேடி மிகப்பல அம்புகள் உடலில்மூழ்க,-இன்று-, கூற்று இருந்த பதிதேடி குடி இருக்க நடந்தனைஓ - யமனிருக்கின்ற இடத்தைத் தேடி அங்கே குடிபோகலாமென்று கருதிச் சென்றிட்டாயோ? கொற்றம் வேந்து ஆய் வீறு இவரு இருந்து - வெற்றிபொருந்திய அரசனாகிய பெருஞ்சிறப்புடனே இங்கே தங்கியிருந்து, ஐவேம்உம் - நாங்கள் ஐந்துபேரும். அடிவருட - (உனது) பாதங்களைத் |