மில்லை கேட்டனம் ஏல் - (முன்னமே இதனைக்) கேட்டு அறிந்தோமேயானால், (அதற்குஏற்ப நடந்திருப்போம்: ஆகையால்அப்போது), வாட்டம் உண்டுஓ - (எங்களுக்குத் துயரத்தினால் இப்போது உண்டாகுந்) தளர்ச்சி நேர்ந்திருக்குமோ? ஈண்டை - இப்போது, நீ உரைத்தபிறகு - நீ சொன்னபிறகே. அறிந்தோம் - (கர்ணன்எங்கட்கு அண்ணன்: குந்திக்குமூத்தபுதல்வன்என்று) அறிந்திட்டோம்; எம்முனை -எமது அண்ணனான கர்ணனை, எமை கொண்டு ஏ - (அவனது தம்பிமாரான)எங்களைக்கொண்டே, இன்று-,நேர்செய்தாய் ஏ - உயிரழியச்செய்து விட்டாயே,(எ- று.)-பித்தன்-செய்யவேண்டுவன தவிரவேண்டுவனதெரியாதவன்: பேய்ச்சியைத்தாய்போலக்கருதி முலையுண்டதனால் இங்ஙன் கூறியது. இது, நகுலன்புலம்பல், பி - ம்: அல்லாதவெமருரைத்தது. (358) 268. | ஆடகனைப்புதல்வனைக்கொண்டழிப்பித்தாயிலங்கைநகர்க் கரசையன்று,வீடணனைப்பகையாக்கிக்கிளையுடனேவீழ் வித்தாய்வேலைசூழ்ந்த, நாடறியப்புகுந்தெமக்குநாயகமாங்கன்னனையுநரன்கையம்பா, லீடழியப்பொருவித்தாயிமையோர்கள்வல்லவிரகியார்வல்லாரே. |
(இ-ள்.) ஆடகனை - இரணியாசுரனை, புதல்வனை கொண்டு - (அவனது) புத்திரனான பிரகலாதனைக்கொண்டு, அழிப்பித்தாய்-, இலங்கை நகர்க்கு அரசை - இலங்காபுரிக்குத்தலைவனான இராவணனை, அன்று - முற்காலத்தில், வீடணனை - (அவன் தம்பியாகிய) விபீஷ்ணனுக்கு, பகை ஆக்கி - பகைவனாகச் செய்து, கிளையுடனே, பந்துவர்க்கத்துடனே, வீழ்வித்தாய் - இறந்துவிழச்செய்தாய், வேலை சூழ்ந்த - கடலாற் சூழப்பட்ட, நாடு - உலகத்திலுள்ளார், அறிய-அறியும்படி, புகுந்து- வந்து, எமக்கு நாயகம் ஆம்-எங்கட்கு எல்லாம் தலைமை பூணவேண்டிய, கன்னனைஉம் - கர்ணணையும், நரன்கை அம்பால் - அருச்சுனனது கையம்பினால், ஈடு அழிய - வலிமை குன்றியிறக்க, பொருவித்தாய்-போர்செய்யுமாறு புரிந்தாய்; இமையோர்கள் வல்ல விரகு - தேவர்களின் வல்லமைபெற்ற உபாயத்தை, வல்லார் -அறியவல்லார், யார்ஏ - யாவர்தாம்' (எ - று.)-இது, சகதேவன்புலம்பல். புதல்வன் தம்பி இவர்களைக்கொண்டே திருமால் தந்தையையும் அண்ணனையும் கொல்வித்தா னென்கிற சிறப்புப்பொருளை, ' இமை யோர்கள் வல்லவிரகியார் வல்லாரே' என்ற பொதுப்பொருள் கொண்டு சமர்த்தித்தது - வேற்றுப்பொருள்வைப்பணி. (359) 269.-கர்ணனைக்குறித்துப் புலம்பியபின் பாண்டவர் பாசறை சேர, சகுனிமுதலியோர் துரியோதனனைக்கொண்டுபாசறைசேர்தல். இவ்வகையேதிருத்தமையனிணையடிக்கீழ்வீழ்ந்தலறியாயுந்தாங்க ளைவரும்போய்த்தம்பாடிவீடடைந்தாராகுலத்தாலழிந்தநெஞ்சார் பைவருமாசுணத்துவசப்பார்த்திவனைக்கொண்டேதம்பாடிபுக்கார் தைவருதிண்சிலைத்தடக்கைச்சகுனிதனைமுதலானதரணிபாலர். |
|