முன்னே, அம்புதொடுத்த - பாணங்களை எய்துசெய்த, போரின்உம் - யுத்தத்தைக்காட்டிலும், மும்மடங்கு - மூன்றுபங்கு அதிகமாக, பொர - போர்செய்ய (எண்ணி),- மன்னர் யார்உம் மதிக்கும் ஆறு - (கண்ட கேட்ட) அரசர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படி, அமர் தொடங்கினார் - போர் தொடங்கினார்கள்; (எ -று.) இதுமுதற் பதினாறு கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டுநான்காஞ் சீர்கள் விளச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். 34.- கர்ணன் நகுலனை வென்று உயிரோடுவிடுதல். அல்லிநாண்முகையம்புயங்களலர்த்துநாதன்மகன் சொல்லினாலுயராயுள்வேதியர்சுதனையின்றமரிற் கொல்லினாதவறுங்கொலென்றொருகோலினாலழியா வில்லினாழியாநடக்கெனமீளவிட்டனனே. |
(இ-ள்.) அல்லி - அகவிதழ்களையுடைய, நாள் - புதிய, முகை அம்புயங்கள் [அம்புயம்முகைகள்]- தாமரையரும்புகளை, அலர்த்தும் - மலரைச்செய்கின்ற, நாதன்- தலைவனான சூரியனுடைய, மகன் - குமாரனான கர்ணன்,- 'சொல்லினால் உயர் -புகழினாற் சிறந்த, ஆயுள் வேதியர் சுதனை - வைத்திய சாஸ்திரம்வல்லவர்களானஅசுவினீதேவரது குமாரனான நகுலனை, இன்று - இப்பொழுது, அமரில் -யுத்தத்தில், கொல்லின் - (நான்) கொன்றால், நா தவறும் - (முன்புகொல்லெனென்றுகுந்திக்குச்சொன்ன எனது) நாக்குத் தவறிப்போம்,' என்று - என்றுஎண்ணி,- ஒருகோலினால் - அம்பு ஒன்றைக்கொண்டு, அழியா வில்லினால் - அழியாதவில்லினாலே, அழியா- தோற்கச்செய்து,- நடக்க என-'(நீ உயிருடன்) செல்வாயாக'என்று (தனது பெருமிதந் தோன்றச்) சொல்லி, மீள - திரும்பும்படி, விட்டனன்-;(எ-று.) ஆயுர்வேதமாவது வியாதியின் காரணம் குறிமுதலியவற்றை அறிந்து மந்திரம் ஒளஷதம் முதலியவற்றால் சிகிச்சை செய்யும்படி ஆயுள் ஆரோக்கியம் முதலியவற்றைச் சொல்லும் வைத்திய நூல் 'அமரில்கொல்லின்நாதவறும்' என்றது -பாண்டவர்க்கு இராச்சியங்கேட்கும்பொருட்டுத் துரியோதனனிடந் தூதுவந்தகிருஷ்ணனது சொல்லின்படி குந்தி கர்ணனிடம் வந்து, தான் அவன் தாயென்பதையும் பாண்டவர் அவன்சகோதரரென்பதையும் தெரிவித்துப் பாண்டவர்பக்கஞ் சேரவேண்டுமென்று சொல்லியதற்குக் கர்ணன் இணங்கானாக, பின்னர்க் குந்தி அருச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம்முறை விடாமலிருக்கவும் மற்றைத் தம்பிமாரைக் கொல்லாமலிருக்கவும் வேண்டுமென்றுகேட்ட வரங்க ளிரண்டைனையும் கர்ணன் கொடுத்தன னாதலின். நா- சொல்லுக்கு. இலக்கணை. கொல் - அசைநிலை. பி-ம்:- வில்லினாணழியா. (34) 35.- மகதராசனையும் விடதரனையும் கர்ணன் கொல்லுதல். நின்றமாநகுலற்குவன்றுணையாகிநின்றிடலான் மன்றன்மாலைவிசாலமார்பினன்மகதபூபனையும் |
|