பக்கம் எண் :

22பாரதம்கன்ன பருவம்

வருணமும்பெயரும்பிறிந்திலர்மனனுமொன்றெனவே
தருணவாணிலவெழநகைத்துரைதந்துபோயினனே.

     (இ-ள்.)அருணம் - செந்நிறமான, வெம் கதிர் ஆயிரத்தவன்- வெவ்விய -
ஆயிரங்கிரணங்களையுடையவனாகிய சூரியன், அன்பினால் உதவும் - அன்போடு
பெற்ற (மகனான), கருணைஉம் - கர்ணனும்,- சில பகழி - சில அம்புகளை, ஈர்
இருகண்ணர் மார்பில் - ஒப்பில்லாத இரண்டு கிருஷ்ணரது [கிருஷ்ண
அருச்சுனரது]மார்புகளில், விடா - செலுத்தி,- (அவையொன்றும் பயன்
படாமையால்),- '(இவ்விருவரும்), வருணம்உம் - நிறமும், பெயர்உம் - பேரும்,
பிறந்திலர் - வேறுபட்டிலர்;மனன்உம் ஒன்று - (அவைமாத்திரமன்றி இவர்கட்கு)
மனமும் ஒன்றே,' என -என்று, வாள் தருணம் நிலவு எழ - ஒளியையுடைய
இளமையான சந்திரகாந்திபோன்ற பற்களின் வெள்ளொளி வெளித்தோன்றும்படி,
நகைத்து - சிரித்து,வரைதந்து - சொல்லிக் கொண்டு, போயினான் - (அப்பாற்)
செல்பவனானான்; (எ -று.)

38.- அருச்சுனன் கர்ணனை 'நாளைவா' என்று விடுதல்.

அன்றுபோர்புரிசேனையின்பதியானவீரனைநீ
யின்றுபோயினிநாளைவாவெனவினிதியம்பினனால்
வென்றிகூர்வரிவின்மையாலடல்வெவ்வரக்கரைமுன்
கொன்றகாளையையொத்தபேரிகைகொண்டவாண்மையினான்.

     (இ-ள்.) அன்று - அப்பொழுது, போர்புரி - யுத்தஞ்செய்த, சேனையின் பதி
ஆன - (கௌரவ) சேனைத்தலைவனான, வீரனை - வீரனாகிய கர்ணனை நோக்கி,
'நீ இன்று போய் - நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய்,
இனி - பின்பு, நாளைவா - நாளைக்கு (ப் போர்க்கு) வருவாயாக,' என - என்று,
இனிது இயம்பினன் - இனிமையாகச் சொன்னான்: (யாவனெனில்,-) வென்றி கூர் -
வெற்றிமிகுந்த, வரி - கட்டமைந்த, வின்மையால் - வில்லின் தொழிலால், அடல்
வெம் அரக்கரை - வலிமையையுடைய கொடிய இராக்கதரை, முன் -
முன்னே[திரோதாயுகத்தில்], கொன்ற-, காளையை - வீரனாகிய ஸ்ரீராமபிரானை,
ஒத்த-, பேர் இசை கொண்ட - மிக்க புகழைக் கொண்ட, ஆண்மையினான் -
பராக்கிரமமுள்ள அருச்சுனன்;

     ஸ்ரீராமன் முதல்நாட்போரிலே இராவணனை 'இன்றுபோய் நாளை நின்
சேனையொடு வா' என்றுகூறி விட்டாற்போல, அருச்சுனனும் தளர்ச்சியுற்ற
கர்ணனைநோக்கி, 'இன்றுபோய்ப்போர்க்கு நாளைவா' என்று இனிது
இயம்பிஉயிரோடு விட்டதனால், இங்கு