பக்கம் எண் :

24பாரதம்கன்ன பருவம்

கன்னியர் மூவரையும் தன் தேரின்மேல் ஏற்றிக்கொண்டு செல்லுகையில்
சுயம்வரத்துக்கு வந்திருந்த மற்ற அரசர்யாவரும் சினந்து திரண்டுவந்து
போர்செய்துதோற்றுப் பரிபவப்பட்டுப் பின்னிட, அவர்களுட் சிறிது போரில்
முன்னிட்டசாலுவனிடத்து அம்பை மனத்தைச் செலுத்த அதனையறிந்த வீடுமனால்
அனுப்பப்பட்டுச் சாலுவனிடஞ் சென்றுசேர, அவன் 'பகைவர் கவர்ந்துபோன
உன்னை யான் தொடேன்' என்று மணம்மறுத்துவிட, பின்னர் இருவராலும்
கைவிடப்பட்ட அவள் தவஞ்செய்து வரம்பெற்று வீடுமனைக் கொல்லுதற்குச்
சிகண்டியாகப்பிறந்தாளென்பது முன்னடியிற் குறித்த கதை. ஒராழி - காலரூபமான
ஏகசக்கரம். 'ஓர் வாளி கொண்டு செலுத்து தேருடை வெஞ், சூரனுக்கெதிராக
மேனிதுளக்கமெய்திய தோள்,' என்னும் பாடத்துக்கு - அருச்சுனனுக்கும்,
அவனுக்குஎதிரிற் சென்று உடம்புநடுக்கமடைந்ததோள் வலிமையையுடைய
கர்ணனுக்கும் (மீண்டும்) பெரும்போர்விளைய எனப் பொருள்கொள்க      (40)

41.- பாண்டியனும் சகுனியும் தம்மிற் பொருதல்.

முழுதுணர்ந்தருண்முனிவரன்புகன்மும்மைவண்டமிழும்
பழுதறும்படிதெளிஞரேறியபலகையொன்றுடையான்
வழுதியுந்தனிமதிநெடுங்குடைமன்னர்மாதுலனும்
பொழுதுசென்றிடுமளவும்வெஞ்சமர்புரியவேறொருபால்.

     (இ-ள்.) முழுது உணர்ந்தருள் - எல்லாவற்றையும் அறிந்தருளிய, முனி
வரன்- முனிவர்களிற் சிறந்தவனான அகத்தியமகா முனிவன், புகல் -
எடுத்துச்சொன்ன, மும்மை வள்தமிழ்உம் - (இயல் இசை நாடகம் என்னும்)
மூன்றுவகைச் சிறந்ததமிழையும், பழுது அறும்படி - குற்றமில்லாமல், தெளிஞர் -
அறிந்தவர்களானதெய்வப் புலவர்கள், ஏறிய - ஏறிவீற்றிருத்தற்கு இடமான, பலகை
ஒன்று உடையான்- ஒப்பற்ற சங்கப்பலகையையுடையவனாகிய, வழுதிஉம் -
பாண்டியராசனும்,- தனிமதி நெடுங் குடை - ஒப்பற்ற  பூர்ணசந்திரன் போன்ற
பெரிய குடையையுடைய,மன்னன் - துரியோதனராசனது, மாதுலன்உம் - மாமனாகிய
சகுனியும்,- பொழுதுசென்றிடும் அளவு உம் - பகற்பொழுது கழியுமட்டும், வேறு
ஒருபால் -மற்றொருபக்கத்தில், வெம் சமர் - கொடிய யுத்தத்தை, புரிய -
செய்ய; (எ - று.)

     பூர்வத்தில் மகாமுனிவர்க ளெல்லாருஞ் சேர்ந்து ஸம்ஸ்கிருத பாஷையை
அபிவிருத்திசெய்து காசியில் வடமொழிச்சங்கம்ஒன்று ஏற்படுத்த,
அச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய அகத்தியனார் மற்றைப் புலவர்களோடு
பலுகாலுந் தருக்கஞ்செய்துவந்து ஒரு நாள் அவர்களோடு மாறுகொண்டு
அவர்களிறுமாப்பை அடக்குதற்பொருட்டுச் சிவபிரானிடஞ்சென்று தம்கருத்தை
வெளியிட, உடனே பரமசிவன் தமிழ்ப்பாஷையை உபதேசிக்க, தத்க்ஷணமே
தக்ஷிணத்திலுள்ள பொதியமலைக்கு வந்து தனிவாசஞ்செய்து இலக்கணநூல்களை
இயற்றி, அவற்றைத் தம் முதல்மாணாக்கராகிய தொல்காப்பியர் முதலிய
பன்னிருவர்க்குங் கற்பித்தருளி